யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த பெண்: மாட்டியது எப்படி தெரியுமா?
அசல் நோட்டு போல் இல்லாமல் பேப்பர்போல் உள்ளதே என்று சந்தேகப்பட்டு நோட்டு கொடுத்த அந்த பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்ப,அவர் பழத்தை வாங்காமல் வேகமாக சென்றுவிட்டார்.
யூடியூப் செயலி உலகம் முழுவதும் அதிகளவில் பயன்பட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், மேலும் இந்த செயலியில் தொழில், பொழுதுபோக்கு, சமையல் டிப்ஸ், உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை எளிமையாகவும், துல்லியமாகவும் பெற முடியும்.

இந்நிலையில் கடன் தொல்லை காரணமாக யூடியூபில் கள்ள நோட்டு தயாரிப்பது எப்படி என பார்த்து நோட்டடித்து விநியோகித்த எம்பிஏ பட்டதாரிப் பெண் சிக்கினார். மேலும் அவர் சிக்கியது எப்படி என்று பார்ப்போம்..

கடலூர் பேருந்து நிலையம்
கடலூர் பேருந்து நிலையம் அருகில் பழ வியாபராம் செய்து வருபவர் குமுதா, இவரிடம் பழம் வாங்கிய ஒரு பெண் ரூ.2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார், அதை வாங்கி பார்த்த குமுதாவுக்கு சந்தேகம் எழுந்தது.

பேப்பர்போல் உள்ளதே ..
அசல் நோட்டு போல் இல்லாமல் பேப்பர்போல் உள்ளதே என்று சந்தேகப்பட்டு நோட்டு கொடுத்த அந்த பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்ப,அவர் பழத்தை வாங்காமல் வேகமாக சென்றுவிட்டார்.

போலீஸார்..
தொடர்ந்து பழ வியாபரி குமுதா சத்தம்போட, அந்தப் பெண் தப்பித்து ஓடியுள்ளார், தப்பி ஓடியவர் பேருந்தில் ஏறியுள்ளார், சிலர் போலீஸுக்குத் தகவல் கொடுக்க போலீஸார் உடனடியாக அங்கு வந்து அந்தப் பெண்ணைப் பிடித்தனர்.

யூடியூபில் பார்த்தேன் ..
மேலும் இதை செயல்படுத்த கள்ள நோட்டை எப்படி அடிப்பது என யூடியூபில் பார்த்தேன் என்று தெரிவித்தார், மேலும் அவர் கூறியது. ரூபாய் நோட்டை ஸ்கேன் எடுத்து கலர் பிரிண்ட் போடலாம், கலர் ஜெராக்ஸ் எடுத்து லாவகமாக ரூபாய் நோட்டைத் தயாரிக்கலாம் எனத் தெரிந்து கொண்டேன். குறைந்த முதலீடு என்பதால் ஸ்கேனிங், பிரிண்டிங் மெஷினை வாங்கினேன்.

2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய், 200 ரூபாய்
அதில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை அடித்தேன், சில இடங்களில் மாற்றினேன், சிக்கிக்கொள்ளவில்லை, அதனால் தைரியம் பெற்று அதிக அளவில் அடித்தேன் தற்போது சிக்கிக் கொண்டேன் என பரணிகுமாரி கூறினார்

பறிமுதல்
பரணிகுமாரியை கைது செய்த போது அவரிடமிருந்து ரூ.69,700 மதிப்புள்ள 33எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள், 5 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள், 6 எண்ணிக்கையிலான 200 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications