மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.!

|

மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பல்வேறு புதிய படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

இனியன்

இனியன்

அதன்படி திருப்பூரில் அன்றாட வீட்டு உபயோ பொருட்களை வைத்து 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு அலாரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். திருப்பூர் அருகில் உள்ள தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிள்ளிவளவன்.இவர் கட்டுமான ஆலோசகராக உள்ளார், இவரது மனைவி கனிமொழி. இவர்களின் மகன் இனியன். பெருமநல்லூரில்உள்ள அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார் இனியன்.

அலாரம்

அலாரம்

பெருமநல்லூர் அரசுப்பள்ளியில் உள்ள அலாரம் இயங்காததை கண்ட இனியன், அன்றாட வீட்டு உபயோ பொருட்களானபாத்திரம், மூங்கில் குச்சி, மொபைல்போன் சார்ஜர், ஹெட்ஃபோன்,இருப்பு ஸ்க்ரூ அகியவற்றை வைத்து புதிதாக அலாரம் ஒன்றை தயார் செய்துள்ளார்.

அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கும் இலவசம் அறிவித்த ஏர்டெல்.!அனைத்து நெட்வொர்க் அழைப்புகளுக்கும் இலவசம் அறிவித்த ஏர்டெல்.!

மிகவும் பிடித்த பாடம் அறிவியல்

மிகவும் பிடித்த பாடம் அறிவியல்

இவர் செய்த அலாரம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழக்கு பேட்டியளித்த இனியன், நான் எப்போதும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன் என்றும், பின்பு எனக்கு மிகவும் பிடித்த பாடம் அறிவியல் எனக் கூறினார்.

 நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் குறித்த நிகழ்ச்சிகளைத்தான் நான் விரும்பி பார்ப்பேன்,எதிர்காலத்தில்ஏதேனும் ஒன்றை மீண்டு புதிதாக உருவாக்குவேன் என நம்பிக்கை உள்ளது என்று இனியன் கூறினார்.

பள்ளி நேரப்படி பெல் அடிக்கும்

பள்ளி நேரப்படி பெல் அடிக்கும்

மேலும் கடந்த வாரம் பள்ளியின் தாழ்வாரத்தில் இருந்த அலாரத்தை காணவில்லை, அதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டேன். அது பழுதாகவிட்டதாக தெரிவித்தார்கள். அதன் வடிவமைப்பை பார்த்து புதிதாக அலாரத்தை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடித்தேன். அதற்கு மொபைல்போன் சார்ஜர், டிசி 15வி மோட்டார், மூங்கில் குச்சி, ஹெட்போன், இரும்பு ஸ்க்ரூ , பாத்திரம் ஆகியவற்றை கொண்டு அலாரம் தயாரித்தேன் என இனியன் கூறினார். இதனுடன் டைமரை இணைத்தால் பள்ளி நேரப்படி பெல் அடிக்கும் எனத் தெரிவித்தார்.

 தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியர்

பெருமநல்லூர் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் கூறுகையில், முதலில் நாங்கள் இதை பார்க்கும்போது இயங்காது என்று தான் நினைத்தோம், ஆனால் இனியன் சுவிட்ச் ஆன் செய்ததும் பெல் அடித்தது. இது சாதாரண மாடல், இதனுடன் பெரிய ஸ்க்ரூவை இணைத்தால் ஒலியை சத்தமாக கேட்க முடியும். இதை எங்கள் பள்ளியில் பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Tirupur Student Made Alarm Bell for his School by Daily use Materials : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X