9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு- எதற்கு தெரியுமா?

|

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய காலம்முதல் ஸ்மார்ட்போன்கள் தேவை பிரதானமாக இருக்கிறது.

இலவசமாக தினசரி  2 ஜிபி டேட்டா

இலவசமாக தினசரி 2 ஜிபி டேட்டா

இந்த நிலையில் இணைய வழி கல்விக்காக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தினசரி 2 ஜிபி டேட்டா தரவு அட்டைகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கலாம். தமிழக அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கையால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 32 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்த அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அதிமுக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் நிலை

தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் நிலை

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் இவரா?-அமேசான், பேஸ்புக் நிறுவனர்கள் பிடித்த இடம் இதுதான்!டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் இவரா?-அமேசான், பேஸ்புக் நிறுவனர்கள் பிடித்த இடம் இதுதான்!

9,69,047 மாணவர்களுக்கு இலவச இணையம்

9,69,047 மாணவர்களுக்கு இலவச இணையம்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்காட் நிறுவனம் மூலமாக வழங்கப்படும்

எல்காட் நிறுவனம் மூலமாக வழங்கப்படும்

ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான நான்கு மாதங்களுக்கும் தினசரி 2ஜிபி டேட்டா எல்காட் நிறுவனம் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த முறையில் கல்வி கற்றிட கோரிக்கை

சிறந்த முறையில் கல்வி கற்றிட கோரிக்கை

இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசு வழங்கும் வழங்கும் விலையில்லா தரவு அட்டைகளை பயன்படுத்தி கல்வியில் மேம்படும்படி மாணவ, மாணவிகளை கேட்டு கொள்வதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Student Gets 2GB Free Data on Daily Basis: Here's How you Can Avail This

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X