அறிமுகமானது அம்மா வைஃபை சேவை; தமிழ்நாட்டின் 5 இடங்களில் கிடைக்கும்.!

குறிப்பாக இச்சேவையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளை 20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்சமயம் சென்னை திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

அறிமுகமானது அம்மா வைஃபை சேவை; தமிழ்நாட்டின் 5 இடங்களில் கிடைக்கும்.!

மேலும் அம்மா வைஃபை மண்டலம் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து கணொளி காட்சியின் வாயிலக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

குறிப்பாக இச்சேவையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளை 20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட் மேலும் தேவைப்படுவோர், ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்ற கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தி பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச வைஃபை சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன் மூலம் அம்மா வைஃபை என்பதை தேர்வு செய்ய வேண்டும், பின்பு அதிர் மொபைல் எண், பெயர், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். பின்பு ஸ்மார்ட்போனுக்கு கடவுசொல் அனுப்பிவைக்கப்படும், அதன்பின்பு எளிமையாக பயன்படுத்த முடியும்.

அறிமுகமானது அம்மா வைஃபை சேவை; தமிழ்நாட்டின் 5 இடங்களில் கிடைக்கும்.!

ரூ. 8.50 கோடி செலவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் (டி.ஆர்.சி.வி.வி) மூலம் பல்வேறு நகரங்களில் இந்த வைஃபை திட்டம்
செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

சென்னையில் மெரினாவில் இலவச வைஃபை கிடைக்கும், அதே போல் சேலம் பேருந்து நிலையத்தில் இலவ வைஃபை கிடைக்கும், மேலும் திருச்சிராப்பள்ளி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பேருந்து நிலையத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமானது அம்மா வைஃபை சேவை; தமிழ்நாட்டின் 5 இடங்களில் கிடைக்கும்.!

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜன்செல்லப்பா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகம்மது ரசூல், கேபிள் டி.வி வட்டாட்சியர் லயனல் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu rolls out Amma Free Wi Fi zones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X