பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த கவலன் SOS ஆப்ஸ் அறிமுகம்.. இவ்வளவு பாதுகாப்பா?
பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சேவை என்று அரசாங்கமும் காவல்துறை ஆணையம் ஏரளமான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த வரிசையில், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தி மேம்படுத்தும் வகையில் தமிழக கவலைத்துறை ஆணையம் இப்போது பெண்களுக்கான புதிய பாதுகாப்பு அம்ச மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஆப்ஸிற்கு 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக இனி 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்த மொபில் ஆப்ஸ் இனி 24 மணி நேரமும் பெண்களுக்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி பெண்கள் இரவு நேரங்களிலோ அல்லது பகல் நேரங்களிலோ தனியாக ஆட்டோவிலோ அல்லது டாக்ஸி வாகனங்களில் தனியாக பயணம் செய்யும் போது முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
'காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்' என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தகவல் தவறானது என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்துவதன் வாயிலாக தங்களுடைய இருப்பிடம் ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக அறியப்பட்டு உடனடி சேவை வழங்கப்படும். இச்செயலியில் உள்ள 'ஷேக் டிரிக்கர்' வசதியை பயன்படுத்தியும் காவல் துறையின் உதவியை பெற இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
அவசர நேரம் மற்றும் ஆபத்தான நேரத்தில் உங்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் உடனே இந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினாள் போதும். நீங்கள் பட்டனை அழுத்திய அடுத்த நொடியில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் லொகேஷனும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும்.
பொதுமக்கள் 'KAVALAN SOS APP' செயலியைப் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியில் உங்களின் லைவ் லொகேஷன், ஜி.பி.எஸ். லைவ் ட்ராக்கிங், அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பப்படும், செயலியில் பதிவு செய்துள்ள உங்கள் குடும்பத்தினரின் எண்களுக்குத் தானாகவே மெசேஜ் அனுப்பப்படும் சேவை போன்று பல சேவைகள் உள்ளது.

இந்த செயலி தற்பொழுது கூகுள்பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண், மாற்று பயன்பாட்டு எண், ஈமெயில் ஐடி, குடும்பத்தினர் விலாசம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் மிக எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் ஷேக் ட்ரிக்கர் வசதியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கள் விபரங்களை ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் இந்த செயலியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








