ஸ்டெர்லைட் போராட்டம்: 3 மாவட்டங்களில் இணையதளம் சேவை முடக்கம்.!

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது மிகவும் அபாயகரமானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

|

வேதாந்தா குழுமம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கடந்த செவ்வாயன்று (மே22) நடந்த போராட்டம் மோவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக மாறியது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 11 பேர் உயரிழந்தனர்.

ஸ்டெர்லைட்  போராட்டம்: 3 மாவட்டங்களில் இணையதளம் சேவை முடக்கம்.!

மேலும் போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கபட்டுள்ளதாக தமிழக உள்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம்:

இணையம்:

குறிப்பாக போராட்டம் தொடர்பாக தவறான வதந்திகள் இணையத்தில் பரவுவரைத் தடுக்க அப்பகுதியில் இணையதள சேவையை முடக்கியுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கண்ணியாகுமரி:

கண்ணியாகுமரி:

மேலும் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இணையதளம் சேவை முடக்கம் செய்துள்ளது என தழிழக
உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கமல்ஹாசன்:

கமல்ஹாசன்:

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது மிகவும் அபாயகரமானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இணைய சேவை 5நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விடியோக்கள்

விடியோக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விடியோக்கள் மற்றும் ஆடியோ தகவல்கள் அலைபேசி இணைய சேவை வழியாக
பல்வேறு இடங்களில் அனைவலாலும் பகிரப்படுகின்றன. மேலும் போரட்டக்காரர்களின் ஒருங்கிணைப்புக்கும் இதுவே உதவுகிறது ஆனால் இதன்
மூலம் வதந்திகளும் பரப்படுவதாக காவல்துறை கருதுகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
நிரஞ்சன் மார்டி:

நிரஞ்சன் மார்டி:

தமிழகத்தில் இப்போராட்டம் குறித்த தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை பார்த்து தமிழக முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
இதை தடுக்கும் வகையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்க தொலை தொடர்பு
நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu orders internet suspension for five days in three southern districts ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X