Home
News

இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.!

இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் சேர்த்த வண்ணம் உள்ளது பேஸ்புக் நிறவனம், அதன்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் சமீபத்தில் மேம்பட்ட கேமரா, யுஐ புதிய ஸ்டிக்கர்கள், ஸ்டோரிகளில்
ஷாப்பிங் செய்யும் வசதி என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

 ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது

மேலும் சில நாட்களுக்கு முன்பு புதிதாக டேட்டா சேவர் அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு இன்று அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது

ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டை கண்டறிந்த தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷ்மன் முத்தையா என்பவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் லக்ஷ்மன்முத்தையா, இவர் முகநூல் புகைப்படம் மற்றும் வீடியோ பகிரும் செயலியாக இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டை கண்டறிந்துள்ளார்.

ரூ.20லட்சம் பரிசாக வழங்கியுள்ளது

ரூ.20லட்சம் பரிசாக வழங்கியுள்ளது

மேலும் குறைபாட்டை சரிசெய்துள்ள பேஸ்புக் நிறுவனம், அதற்கு பரிசாக 30,000 டாலர்,அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20லட்சம் பரிசாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சரிசெய்ய முடியவில்லை

சரிசெய்ய முடியவில்லை

பாஸ்வேர்டை மீண்டும் அமைக்க சொல்லி வரும் கோரிக்கை மூலம் ஒருவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்ய முடியும் என கூறி ஹேக் செய்துள்ளார். மேலும் முத்தையா கூறியது என்னவென்றார், இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே பேஸ்புக் பாதுகாப்பு குழுவிடம் அறிக்கையாக கூறினேன். அந்த அறிக்கையில் போதுமான தகவல் இல்லாததால் அவர்களால் அதனை சரிசெய்ய முடியவில்லை.

இ-மெயில் ஆதாரங்கள்

அதன்பின்பு சில இ-மெயில் ஆதாரங்கள் மற்றும் இது தொடர்பான வீடியோ மூலம் அவர்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க முடியும் என்பதை நிரூபித்தேன், பேஸ்புக் குழு தற்போது அதனை சரிசெய்துள்ளது. மேலும் இதனை கண்டுபிடித்து கூறியதற்கு எனக்கு 30,000 டாலர் பரிசாக வழங்கியதாகவும் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
tamil-nadu-man-laxman-muthiyah-finds-bug-to-hack-into-any-instagram-account-gets-30-000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X