தமிழக மக்களே கவனியுங்க.. LPG சிலிண்டர் முறையில் மாற்றம்.. QR கோட் உடன் இனி சிலிண்டர்.. யாரும் ஏமாற்ற முடியாது
வீடுகளில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு கேஸ் சிலிண்டரைகளில் (Liquid Petroleum Gas Cylinders) இனி மக்கள் க்யூஆர் கோட் (QR code) குறியீடுகளை விரைவில் பெறப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களில் கட்டாயமாக டெம்ப்பர் ப்ரூஃப் சீல் கொண்ட LPG சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டர் திருட்டு, பிளாக்கில் சிலிண்டர் விற்பனை செய்வது, பதிவு செய்யப்பட்டவரின் சிலிண்டரை மற்றவர் பயன்படுத்துவது போன்ற செயல்கள் தடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் விற்பனைக்கு வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (GCR) வரைவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் பொழுது எடை குறைவதாகவும், சிலிண்டர்களில் திருட்டு நடப்பதனால் இந்த புது செயல்முறை கொண்டுவரப்படுகிறது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களில் இனி க்யூஆர் கோட் குறியீடு (LPG Gas Cylinder With QR Code):
இதன் இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில், விரைவில் தமிழகத்தில் விநியோகம் செய்யப்படும் LPG கேஸ் சிலிண்டர்களில் இனி மக்கள் புதிய டெம்ப்பர்டு ப்ரூஃப் சீல் உடன் கூடிய க்யூஆர் கோட் குறியீடுகளை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய க்யூஆர் கோட் சேவையின் மூலம் என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வசதியைத் தொடங்கவுள்ளது. இதற்கு "பியூர் ஃபார் ஷோர்" (Pure For Sure) என்று பெயரிடப்பட்டுள்ளது. LPG நிறுவனத்தின் கருத்துப்படி, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதே இந்த சேவையின் நோக்கமாகும்.
எல்பிஜி சிலிண்டர்களின் தரம் மற்றும் அளவை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் நேரடியாக வழங்குவதற்கு பிபிசிஎல் இதை அறிமுகம் செய்வதாக LPG நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே இதுபோன்ற முதல் சேவை இதுவாகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, வாடிக்கையாளரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரில் டேம்பர்-ப்ரூஃப் சீல் இருக்கும், அதில் QR குறியீடும் தெரியும். இதன் மூலம் சிலிண்டர் உற்பத்தி ஆலையில் இருந்து வாடிக்கையாளரின் வீடு வரை எந்தவித திருட்டும் நடக்காமல் உத்தரவாதம் அளிக்கப்படும்.
தமிழக மக்களே கவனியுங்க.. QR கோட் உடன் இனி கேஸ் சிலிண்டர்.. இனி மக்கள் யாரும் ஏமாற்ற முடியாது:
QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, வாடிக்கையாளர்கள் சிக்னேச்சர் ட்யூனுடன் கூடிய பிரத்தியேகமான Pure for Sure பாப்-அப்பைக் காண்பார்கள். இதில் சிலிண்டர் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த பாப்-அப்பில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சிலிண்டரில் LPG நிரப்பும் போது சிலிண்டரின் மொத்த எடை என்ன?முத்திரை குறி இருந்ததா இல்லையா? என்பது போன்றவை இனி உங்கள் போனில் நேரடியாக காண்பிக்கப்படும்.
டெலிவரியை ஏற்றுக்கொள்வதற்கு முன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதிசெய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை அங்கீகரிக்க இது உதவுகிறது. சிலிண்டர் முத்திரையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாது. இதனால் டெலிவரி நிறுத்தப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சரியான எடையில், சரியான சிலிண்டர்கள் வழங்கப்படும். அதேபோல், சிலிண்டர் மானியம் கணக்கும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி யாரும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








