Home
News

வாட்ஸ்அப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை.. இந்த நம்பரை Save பண்ணிக்கோங்க.. ஒரே மெசேஜ்.. உடனடி சேவை..

தமிழ்நாடு அரசு தற்போது பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பொதுமக்களின் அவசர மருத்து தேவைக்கு தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எண்ணற்ற பொதுமக்கள் இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப்பில் (WhatsApp) கிடைக்கும் படியாக, பிரத்தியேகமான வசதியை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு. அதன்படி சென்னையில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த புதிய சேவையைத் தொடங்கி வைத்தார்.

வாட்ஸ்அப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை.. இந்த நம்பரை Save பண்ணிக்கோங்க..

தமிழ்நாட்டில் இப்போது EMRI கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனத்தின் மூலம் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 303 ஆம்புலன்ஸ்களில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுவும் மலைப் பகுதிகளுக்குச் செல்ல 40 ஆம்புலன்ஸ்களும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையில் கிட்டத்திட்ட 7000-க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

அதேபோல் தினமும் அவசர மருத்து சேவை வேண்டி ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, பொதுமக்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மக்களின் அழைப்புகள் வந்த உடனே ஆம்புலன்ஸ்கள் வேகமாக அனுப்பி வைக்கப்படும்.

அதுவும் அழைப்புகள் வந்தவுடன் பெருநகரங்களில் 6.59 நிமிடங்களிலும், நகர்ப்புறங்களில் 9.40 நிமிடங்களிலும், கிராமங்களில் 11.31 நிமிடங்களிலும் மற்றும் மலைப்பகுதிகளில் 13.18 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ்கள் கிடைக்கப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த கால அளவை மேலும் குறைக்கும் விதமாக இப்போது நவீன தொழில்நுட்பத்தில் ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி இனி வாட்ஸ்அப் செயலியில் ஆம்புலன்ஸ் சேவையைப் பொதுமக்களால் பெற முடியும். இதற்காக பிரத்தியேகமாக 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் போதும் உங்களது நிகழ் நேர இருப்பிடம் ட்ராக் செய்யப்பட்டு விரைவாக ஆம்புலனஸ் வந்தடையும். சரி இப்போது வாட்ஸ்அப்பில் ஆம்புலனஸ் சேவையைப் பெறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1.முதலில் பொதுமக்கள் தங்களது போனில் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அடுத்து உங்களது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

3. அதன்பின்பு நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடனே Book Ambulance என்ற லிங்க் வரும். அதை கிளிக் செய்து உங்கள் இருப்பிடத்தைப் பகிர வேண்டும்.

4.பின்னர் உங்கள் கோரிக்கை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.

வாட்ஸ்அப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை.. இந்த நம்பரை Save பண்ணிக்கோங்க..

5. குறிப்பாக டிரைவரின் பெயர், மொபைல் எண், வாகன எண் ஆகியவை உங்களுக்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும்.

6. அதுவும் ஆம்புலன்ஸின் வழித்தடம், எப்போது வந்து சேரும் என்ற கால அளவையும் நீங்கள் ஆன்லைனில் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்த புதிய சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய வசதிகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு வசதியும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Launches WhatsApp Chatbot for 108 Ambulance Service: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X