இனி வாட்ஸ்அப் போதும்.. பிறப்பு முதல் வருவாய் சான்றிதழ் வரை.. இதை உடனே நோட் பண்ணுங்க.. ஏன்?
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியைப் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பல முக்கிய சேவைகளும் கிடைக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்களைப் பெற தமிழக அரசு (Tamil Nadu govt) புதிய வசதியை ஒன்று செயல்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது வாட்ஸ்அப் செயலி மூலம் அரசு சேவைகளை வழங்கிட கடந்த சில மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக இப்போது வாட்ஸ்அப் செயலியில் அரசு சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு வாட்ஸ்அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு மற்றும் வருவாய் துறை சான்றிதழ்கள் உட்பட 50 சேவைகளை வழங்க உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் இனி வாட்ஸ்அப் செயலி மூலம் அரசு சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுவரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் என்றால் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் வருவாய் துறை சான்றிதழ்கள் உட்பட 50 சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் இருக்கும் நந்தம்பாக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகளிடைய ஒப்பந்தமானது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் போது தமிழக அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
வாட்ஸ்அப் செயலியில் 78452 52525 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட தமிழக அரசின் வருவாய்த் துறை சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி குறித்து META நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் கூறியது என்னவென்றால், மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிகவும் எளிதாக கிடைக்கும். அதுவும் தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு எந்த சான்றிதழ் தேவை என்பதை குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின்பு சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே வாட்ஸ்அப் வழியாக அரசு சான்றிதழ்களைப் பெறும் நடைமுறை தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தான் தமிழகத்தில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் அரசு சான்றிதழ்களை வேண்டி யாரும் நீண்ட நாட்கள் காத்திருக்க அவசியம் இருக்காது.
அதேபோல் ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற சேவைகளும் விரைவில் இந்த வாட்ஸ்அப் செயலியில் இணைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








