100G டெக்னாலஜி தமிழ்நாட்டில்.. சென்னைக்கு வரும் உலகளவில் மிகப்பெரிய Nokia ஆய்வகம்.. தமிழ்நாட்டு அரசு குஷி..
நோக்கியா (Nokia) நிறுவனம், சென்னையில் உள்ள தனது ஃபிக்ஸ்ட் நெட்வொர்க்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (Fixed Networks R&D facility) விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டம் குறித்த தகவலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் முழு ஆதரவு கிடைத்துள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், நோக்கியாவின் உலகளாவிய பெரிய ஆய்வகங்களில் ஒன்றாக இது மாறும் என்று நோக்கியா கூறியுள்ளது. நோக்கியா ஃபிக்ஸ்ட் நெட்வொர்க்ஸ் பிரிவுக்கான மிகப்பெரிய ஆய்வகமாகவும் இருக்கும்.
இது துணை வளர்ச்சிப் பகுதிகளை இணைத்து, எதிர்கால டிஜிட்டல் தளங்களை மேம்படுத்தும் பல வகையான திட்டங்களை கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த விரிவாக்கத்துக்கு அடிப்படை கட்டமைப்பு, நிறுவன மற்றும் கொள்கை ஆதரவை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்த கூட்டாண்மை சென்னை ஒரு தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வரும் அதன் பங்கை வலியுறுத்துகிறது.

நோக்கியாவின் 10ஜி (10G), 25ஜி (25G), 50ஜி (50G), மற்றும் 100ஜி பிஓஎன் தொழில்நுட்பங்கள்:
நோக்கியாவின் உலகளாவிய செயல்பாடுகளில், நிறுவனத்தின் எதிர்கால முக்கியத்துவத்தை இந்த விரிவாக்கம் சாத்தியமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் செய்யப்படும் நோக்கியாவின் தொழிற்சாலையில், நிறுவனம் பல புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் நோக்கியா நிறுவனம் 10ஜி (10G), 25ஜி (25G), 50ஜி (50G), மற்றும் 100ஜி பிஓஎன் தொழில்நுட்பங்களை (100G PON technologies) உருவாக்க திட்டமிட்டுள்ளது.
100G-ஆ அடேங்கப்பா ஓவர் ஸ்பீட் போலயே என்று சில கருதுவீர்கள். இன்னும் சிலருக்கு 100G என்றால் என்ன என்ற சந்தேகமும் இருக்கும்? 30 ஆண்டுகளுக்கு முன்பு ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) நெட்வொர்க்குகளில் செயலற்ற ஆப்டிகல் நெட்வொர்க் (PON) தொழில்நுட்பம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதால், இது 622 Mbps இல் இருந்து 10 Gbps திறன் வரை இன்று நெட்வொர்க் ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியான அதிநவீன PON தொழில்நுட்பங்கள் தான் இந்த 25G, 50G மற்றும் 100G PON தொழில்நுட்பங்களாகும். இத்துடன், நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தவுள்ள நிலையங்களில் பிக்ஸடு வயர்லெஸ் ஆக்ஸஸ் (Fixed Wireless Access), வைஃபை (Wi-Fi) மற்றும் எம்டியு சொலுஷன் (MDU solutions) போன்ற தொழில்நுட்பங்களை மேம்மடுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் கூடுதலாக ஹோம் கண்ட்ரோல் சாதனங்கள் மற்றும் அதிவேக நெட்வொர்க்குகளில் வேலை செய்கிறது.
100G டெக்னாலஜி தமிழ்நாட்டில்.. சென்னைக்கு வரும் உலகளவில் மிகப்பெரிய Nokia ஆய்வகம்:
விரிவாக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு ஒப்பந்த நினைவுக் குறிப்பு (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா இருவரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் தமிழ்நாடு வழிகாட்டுதல் மற்றும் நோக்கியா இடையே இந்த ஒப்பந்தம் மாற்றப்பட்டு கையெழுத்தானது. சென்னையில் உள்ள நோக்கியா தளம் மிக விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா தளம் விரிவடையும் பொழுது, தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தை பெருமிதமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








