இனிமேல் இ-பாஸ் கட்டாயம்: தமிழிக அரசு அறிவிப்பு.!
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல்COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்தியசுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கோவின் பயன்பாடு தளம்தடுப்பூசியை சுயமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

கொரோனா தொற்று
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சில மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இந்த கொரோனா பாதிப்பு அதிகித்து வருகிறது. அதிலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், தஞ்சாவூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இந்த கொரோனா தொற்று சற்று அதிகமாக காணப்படுகிறது.

இ-பாஸ் நடைமுறை
எனவே இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மீண்டும் இ-பாஸ் நடைமுறை கொண்டுவந்துஅதில் புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பின்பு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை தவிர,மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு
இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்ஆப்பரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையத்தில் கட்டாயம்கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications