Home
News

இனி எந்த நலத்திட்டமும் மிஸ் ஆகாது.. தமிழக அரசின் நேரடி WhatsApp சேனல்.. கட்டாயம் உங்கள் போனில் இருக்கனும்..

தமிழக அரசு (Tamilnadu Government) பொதுமக்களுக்காக பல நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பல நலத்திட்டங்கள் (Welfare schemes) மற்றும் நலத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) மூலம் ஒரே இடத்தில் அணுக அனுமதிக்கும் புதிய சேவையை தமிழக அரசு தற்போத அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக தமிழக அரசாங்கத்தின் கீழ் பல்வேறு துறைகள் பொதுமக்களுக்காக சேவை செய்ய இயங்கி வருகிறது. ஒவ்வொரு துறைக்கும் பல நலத்திட்டங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமென்றால், பல சிறப்பு நலத்திட்டங்களை (special welfare schemes) கூட தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக வழங்கி வருகிறது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் திட்டங்கள், நலத்திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் என்று பல திட்டங்கள் நிர்வகிக்கப்பட்டு (managed) வருகிறது.

இனி எந்த நலத்திட்டமும் மிஸ் ஆகாது.. தமிழக அரசின் நேரடி WhatsApp சேனல்

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்த புதிய வாட்ஸ்அப் சேனல் (Tamil Nadu Government Launched New WhatsApp Channel):

தமிழக அரசுடன் (TN Govt.) தொடர்புடைய ஒவ்வொரு துறைக்கும் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, தனித்தனி சமூக வலைத்தள பக்கங்களை (social media pages) அந்தந்த துறைகள் நிர்வகித்து வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் தொடர்புடைய தகவல்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த செய்திகள் (messages), உடனுக்குடன் சமூக வலைத்தள சேனல்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மையை சொல்ல போனால், பொதுமக்கள் அப்டேட்டாக இருக்க பல தளங்களை பின்தொடர வேண்டியதுள்ளது.

இதனால், சில நேரங்களில் பல துறைகள் சார்ந்த முக்கியமான தகவல்களை மக்கள் தவறவிட்டுவிடுகிறார்கள். இதுவொரு பெரிய குறைபாடாக கருதப்பட்டு வந்தது. இந்த சிக்கலுக்கு தீர்வாக, தற்போது தமிழக அரசாங்கம், பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் தளத்தில் (WhatsApp platform) ஒரு சூப்பரான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், இனி தமிழக அரசின் திட்டங்கள் (Tamil Nadu government plans) மற்றும் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை இனி நீங்கள் 'வாட்ஸ்அப்' மூலம் அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசின் திட்டங்கள் (plans) மற்றும் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் (New Tamil Nadu Government Plan Updates) மற்றும் தகவல்களை (Informations) பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த தற்போது புதிய வாட்ஸ்அப் சேனலை (New TN Govt. WhatsApp Channel) தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகமான பொதுமக்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துவதனால், இது பெரியளவில் பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சேனலில் எப்படி பொதுமக்கள் சுலபமாக சேரலாம்? உங்கள் போனில் கட்டாயம் இது இருக்கனும்:

இனி தமிழக அரசுடன் தொடர்பில் உள்ள துறைகளில் இருந்து வெளியிடப்படும் முக்கியமான தகவல்கள் இனி ''TNDIPR, Govt. of Tamil Nadu'' என்ற வாட்ஸ்அப் சேனல் மூலம் பொதுமக்களுக்கு அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இனி நேரடியாக உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) மற்றும் மொபைல் (mobile) சாதனம் வழியாக இனி தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

உங்கள் மொபைலில் உள்ள QR ஸ்கேனர் (QR scan) ஓபன் செய்து, இந்த பதிவில் உள்ள புகைப்படத்தை ஸ்கேன் செய்து, தமிழக அரசின் புதிய வாட்ஸ்அப் சேனலுடன் நீங்கள் இணைந்து பயன்பெறலாம். அல்லது, மிகவும் சுலபமாக கீழே
https://whatsapp.com/channel/0029VaaD7yW9Bb62oAgneJ0T
குறிப்பிடப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து, தமிழக அரசின் வாட்ஸ்அப் சேனலில் நீங்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த வாட்ஸ்அப் சேனல் கட்டாயம் ஒவ்வொரு தமிழனின் மொபைல் போனிலும் இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tamil Nadu Government Launched New WhatsApp Channel To Know Details About TN Schemes On Your Mobile Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X