Home
News

இளைஞர்களே கவனியுங்க.. தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி முதலீடு.. Tata, Pegatron, TVS இல் 40,500 வேலை வாய்ப்பு..

சென்னையில் நடந்து வரும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics), பெகாட்ரான் (Pegatron), டிவிஎஸ் (TVS) குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் (Tamil Nadu) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. இது பற்றிய முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

இந்த ஆண்டு ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட அமர்வில், செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் பாலிசி (Semiconductor and Advanced Electronics Policy), 2024 உடன் 'விஷன் $1 டிரில்லியன்' (Vision $1 trillion) அறிக்கையை நமது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இளைஞர்களே கவனியுங்க.. தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி முதலீடு..

டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ. 12,082 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன் தற்போதைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு உதிரிபாக உற்பத்தி வசதியை விரிவுபடுத்துகிறது. இது 40,500 பேருக்கு வேலை வாய்ப்பை (employment opportunity) உருவாக்குகிறது.

பெகாட்ரான் (Pegatron) முதலீடு ரூ.1000 கோடி:
தைவானிய எலெக்ட்ரானிக்ஸ் (Taiwanese Electronics) உற்பத்தியாளர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு முக்கிய சப்ளையரான, Pegatron ரூ. 1000 கோடி உற்பத்தி செய்யவுள்ளது. இதன் உற்பத்தித் தளத்தை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கிறது. இதில் கம்ப்யூட்டிங், தகவல் தொடர்பு மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு நிறுவனம் விரிவுபடுத்தும். இதன் மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாகும்.

பெகாட்ரான் 2021 ஆம் ஆண்டில் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் நுழைந்தது. இது ரூ.1,100 கோடி முதலீட்டில் அதன் யூனிட்டை சென்னைக்கு அருகில் உள்ள சிங்கபெருமாள்கோவிலில் நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடு செய்கிறதென்று பார்க்கலாம்.

டிவிஎஸ் குழுமம் ஆட்டோமொபைல் (TVS Group Automobiles):

SW எனர்ஜி, TVS குரூப், ஹூண்டாய் மற்றும் பிற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. JSW எனர்ஜி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ. 10,000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 6,600 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், டிவிஎஸ் குழுமம் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி ஆகியவற்றில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்துள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம், கும்மிடிப்பூண்டியில் தற்போதுள்ள ஏசி உற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் ரூபாய் 250 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 60 சதவீத பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ICE & கச்சிபுரம் மாவட்டத்தில் EV பாசஞ்சர் கார் மற்றும் EV பேட்டரி உற்பத்தி நிலையத்தை உருவாக்குகிறது. இதற்காக நிறுவனம் ரூ. 6180 கோடி முதலீடு செய்துள்ளது. இது ஐஐடி மெட்ராஸுடன் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு நிலையத்தையும் அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM) 2024-ஐ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tamil Nadu Global Investors Meet 2024 in Chennai Vision $1 Trillion Tata Electronics Pegatron TVS Group
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X