Home
News

ரூ.200 விலையில் வீட்டுக்கு வீடு இன்டர்நெட்.. பட்டி தொட்டி - சிட்டி வரை 100Mbps ஸ்பீட்.. தமிழக அரசு அதிரடி..

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் திட்டத்தின் (Tamil Nadu FibreNet Corporation Limited's project) குறித்த விபரங்களை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை இணை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் (State Minister for Information Technology and Digital Services, Palanivel Thiaga Rajan) எடுத்துரைத்திருக்கிறார். சுமார் 12,525 கிராமங்களை (villages) 1 Gbps அலைவரிசையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் முழுக்க இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் சமீபத்திய அறிவிப்பின் படி, தமிழ்நாட்டின் டிஜிட்டல் துறை (digital sector) ஒரு மிக பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு வெறும் 200 ரூபாய் விலையில் 100Mbps வேகம் கொண்ட இணைய சேவை (100Mbps speed internet service) வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.200 விலையில் வீட்டுக்கு வீடு இன்டர்நெட்.. 100Mbps ஸ்பீட்.. அதிரடி..

ரூ.200 விலையில் வீட்டுக்கு வீடு இன்டர்நெட்.. பட்டி தொட்டி - சிட்டி வரை 100Mbps ஸ்பீட்:

200 ரூபாய் விலையில் வீட்டுக்கு வீடு 100Mbps வேகத்தில் இணைய சேவை (internet service) கிடைக்கப் போவதென்பது ஒரு அற்புதமான செய்தியாக அமைந்துள்ளது. இந்த திட்டம் முக்கியமாக தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராமங்களை (villages) நோக்கி முதலில் பாயவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, 57,500 கி.மீ ஆப்டிகல் ஃபைபர் (optical fiber) அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு 1Gbps இணைப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தின் 93% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் திரு. பழனிவேல் தியாக ராஜன் தெரிந்தார். இந்த திட்டத்தின் மூலம் இப்போது வரை, சுமார் 11,639 கிராம பஞ்சாயத்துகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் இணைப்பை கணிசமாக (internet connection in villages) மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மலிவு விலையில் ஹை-ஸ்பீட் இனீட்ர்நெட் சேவை:

கல்வி நோக்கங்களுக்காக அதிவேக இணைய அணுகல் (high speed internet in villages for educational purpose)மிக முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இணைய அணுகல் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதன் சரி செய்யவே இந்த திட்டம் குறிப்பாக கிராமப்புறங்களை நோக்கி வேகமாக பாய்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மலிவு விலையில் ஹை-ஸ்பீட் இனீட்ர்நெட் சேவை (low cost high speed internet service in Tamil Nadu) கிடைப்பதன் மூலம் இணைய அணுகல் எல்லோருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது.

கல்வி நோக்கங்களுக்காகவும், அறிவிற்கான சமமான அணுகல் மிகவும் முக்கியமானது. குறிப்பாக கல்வி வளங்களும் திட்டங்களும் ஆன்லைனில் அதிகரித்து வருவதால், சமூக நீதியை உறுதி செய்வதில் இந்த முயற்சி ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. கடைசி மைல் இணைப்புக்கு 4,700 பஞ்சாயத்துகள் விண்ணப்பித்துள்ளதாகவும். வீடுகளுக்கு 100 Mbps இணைப்புகளைக் கொண்டுவர கேபிள் டிவி ஆபரேட்டர்களைப் (cable TV operators) போன்ற ஒரு உரிமையாளர் மாதிரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tamil Nadu FibreNet Corporation Limited project 100 Mbps High Speed Data At Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X