ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க சிலிண்டர் போன்ற புதிய கருவி.! அசத்திய நெல்லை பொறியாளர்

|

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இன்ஜினீயர்கள் கொண்டுவரும் புதிய படைப்புகள் பல்வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. அதன்படி நெல்லையை சேர்ந்த இன்ஜினீயர் ஒருவர் அழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

ஆழ்துளை கிணறுகள்

ஆழ்துளை கிணறுகள்

அதாவது விவசாய நிலங்களில் தண்ணீருக்காக சுமார் 100 முதல் 700அடி வரையில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன,தன்ணீர் சரியாக கிடைக்காத காரணத்தால் அந்த ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாமல் செல்வதால், அவற்றுள் குழந்தைகள் சிக்கி உயரிழப்பது தொடர்ந்து வருகிறது.

 திருச்சியை சேர்ந்த சுஜித்

திருச்சியை சேர்ந்த சுஜித்

குறிப்பாக கடந்த ஆண்டு திருச்சியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம்நாட்டையே உலுக்கியது என்று தான் கூறவேண்டும், இதேபோல் அதிக இடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!இனி தினசரி 1.5 ஜிபி இல்ல 3 ஜிபி டேட்டா., அதே விலையில்: Vodafone அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் குஷி!

நெல்லையைச் சேர்ந்த பகவதி

நெல்லையைச் சேர்ந்த பகவதி

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி குழந்தைகள் உயிரழப்பதைக் கண்டு மிகுந்த வேதனை அடைந்த நெல்லையைச் சேர்ந்த பகவதி என்பவர் புதிதாக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். சிலிண்டர் போன்ற அமைப்புடன் இயங்கும் இந்த கருவியில் உள்ள கேமரா குழந்தையின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது.

 35கிலோ எடை கொண்ட குழந்தையை தூக்கமுடியும்

35கிலோ எடை கொண்ட குழந்தையை தூக்கமுடியும்

மேலும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கிலி போன்ற அமைப்பால் குழந்தையை மேலே தூக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் பகவதி. குறிப்பாக இந்த கருவி மூலம் சுமார் 200அடி ஆழத்தில் சிக்கியுள்ள 35கிலோ எடை கொண்ட குழந்தையை தூக்கமுடியும் என பகவதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆழ்துளை மீட்புக் கருவி

ஆனால் கடந்த 2002-ம் ஆண்ட சிறிய அளவில் தான் உருவாக்கிய ஆழ்துளை மீட்புக் கருவியை புதிய தொழில்நுட்பங்களுடன் மகன் மேம்படுத்தியுள்ளதாக பகவதியின் தந்தை சிவபாலன் தெரிவித்தார்..

இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள் பயன்படுத்த மாட்டிர்கள்.! இதோ காரணம்.!

 சிவபாலன் கோரிக்கை

சிவபாலன் கோரிக்கை

பின்பு தனது மகனின் கண்டுபிடிப்புகளை பரிசோதித்து அரசு அங்கிகாரம் வழங்க வேண்டும் என சிவபாலன் கோரிக்கைவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Engineer Found new Machine for Rescuing Baby from Borewell: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X