சமூக இடைவெளியைச் சரியாகப் பின்பற்றி சரக்கு வாங்கிய ரோபோட்! விலை என்ன தெரியுமா?

|

கோயம்புத்தூரில் நடந்த விசித்திரமான சம்பவம், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட வரிசையில் நெருக்கமாகக் காத்திருந்த குடிமகன்களுக்கு மத்தியில் ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சமூக இடைவெளியைக் குடிமகன்கள் சரியாகப் பின்பற்றி இருந்தார்கள், என்னடா இது ஆச்சரியமா இருக்கே! அப்படி இந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று உற்றுப்பார்த்து போது தான் அங்குச் சரக்கு வாங்க ஒரு ரோபோட் வரிசையில் காத்திருப்பது தெரியவந்தது.

உரிமையாளருக்காக சரக்கு வாங்க வந்த ரோபோ

உரிமையாளருக்காக சரக்கு வாங்க வந்த ரோபோ

கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் வேலாயுதம் என்பவர் மதுபானங்களை வரிசையில் நின்று வாங்க, கூட்டத்திற்கு மத்தியில் அவருக்குப் பதிலாக அவர் உருவாக்கிய நான்கு சக்கர ரோபோவை பயன்படுத்தியிருக்கிறார். டாஸ்மாக் கடைகளில் அதிக கூட நெரிசல் இருப்பதனால் கொரோனா காலத்தில் இது பாதுகாப்பானது இல்லை என்பதை உணர்ந்த கார்த்திக் இந்த ஸ்மார்ட் யோசனையை பயன்படுத்தியிருக்கிறார்.

சமூக இடைவெளி மிக முக்கியம்

சமூக இடைவெளி மிக முக்கியம்

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தொற்றுநோயான இந்த நேரத்தில் சமூக தூரத்தின் முக்கிய அவசியத்தை மக்களுக்குப் புரிய வைப்பதற்கான விழிப்புணர்வு காரியத்திற்காகத் தான் இந்த ரோபோவை உருவாக்கியதாகக் கூறுகிறார் கார்த்திக் வேலாயுதம். 31 வயதான கார்த்திக் ஒரு கணினி பொறியாளர் இவர் இது போன்று இன்னும் பல தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கியுள்ளார்.

Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

நெரிசலுக்கு இடையில் ஒரு இடத்தில் மட்டும் சமூக இடைவெளி

நெரிசலுக்கு இடையில் ஒரு இடத்தில் மட்டும் சமூக இடைவெளி

கார்த்திக் இந்த இயந்திரத்தை இரண்டு நாட்களில் வெறும் ரூ.3,000 செலவில் உருவாக்கியுள்ளார். அவரின் இந்த நான்கு சக்கர ரோபோ இயந்திரத்தை உலகின் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் இயக்க என்று கூறியுள்ளார். இந்த ரோபோவைப் பயன்படுத்துவதன் மூலம், தொற்றுநோய் அபாயம் எதுவும் இல்லாமல், நீங்கள் சமூக தூரத்தை வெற்றிகரமாகப் பராமரிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மதுக்கடையில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றிய ரோபோட்

மதுக்கடையில் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றிய ரோபோட்

மதுக்கடையிலிருந்த நெரிசலுக்கு இடையில் ஒரு இடத்தில் மட்டும் சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்பட்டதுக்கு இதுவே காரணம்.அதேபோல், இந்த ரோபோ நோயாளிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளாமல் மருந்துகள் அனுப்ப மருத்துவர்களுக்கு உதவும் என்றும், மற்ற துறைகளிலும் தேவையான குறைந்த அளவு உதவிகளை இந்த ரோபோ செய்து முடிக்கும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!

ரோபோ ஷாப்பர்

ரோபோ ஷாப்பர்

குட்டீஸ் பயன்படுத்தும் சைக்கிள் சக்கரம் நாலை யூஸ் பண்ணி ஒரு கியருடன், சென்சார் கருவிகளை பொருத்தி மொபைலுடன் கனெக்ட் செய்து இந்த ரோபோவை இயங்கும்படி வடிவமைத்து உருவாக்கியுள்ளார்.தற்போது இந்த ரோபோ 30 கிலோ எடை வரை கொண்டு செல்லக்கூடியது, மேலும் இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை பயன்படுத்தல் என்று கூறியுள்ளார்.

ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கலாம்

ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கலாம்

ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவது, அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்கும், சூப்பர் மார்க்கெட் செல்வதற்கும் இந்த ரோபோவை பயன்படுத்தலாம் என்று இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ரோபோ தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உதவியுடன் இயக்கப்படுகிறது.

Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?

வீடியோ கால் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி

வீடியோ கால் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி

வீடியோ கால் மற்றும் அழைப்பு வசதிகள் உள்ளது, இதனால உரிமையாளர் இவற்றை மற்றவர்களுடன் தொடர்புகொண்டு பயன்படுத்த அனுமதிக்கிறது. வீடியோ வசதி மூலம் கடைக்காரர்களுடன் நேரடியாகப் பயனர் தொடர்பு கொண்டு தேவையான அத்தியாவசியங்களை வாங்கிக்கொள்ளலாம். வாங்கி பொருட்களுக்கான கட்டணம் அனைத்தும் ஆன்லைனில் செய்துகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Engineer Created Robot Shopper To Maintain Social Distancing At Tasmac : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X