ஃபேஸ்புக் மூலம் பிரச்சாரம் : தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி.!!

By Meganathan
|

தமிழ் நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பெற தமிழக தேர்தல் ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றது. இத்தகவலை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உறுதி செய்தார்.

ஃபேஸ்புக் மூலம் பிரச்சாரம் : தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி.!!

தமிழ்நாட்டில் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொது தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டும் நோக்கில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்த இருப்பதாக லக்கானி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

இந்த இலக்கை எட்ட ஏற்கனவே ட்விட்டர் தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு பிரச்சாரம் செய்ய ட்விட்டர் தளத்தை பயன்படுத்து என்றும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என ஃபேஸ்புக் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் ஆங்கி தாஸ் தெரிவித்துள்ளார்.

தகவல்கள்

தகவல்கள்

இதோடு வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தும் நினைவூட்டல்கள் மற்றும் வாக்குப்பதிவு சார்ந்த தகவல்கள் கொண்ட இணைப்பையும் ஃபேஸ்புக் வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

தமிழகத்தில் உள்ள 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்களில் ஒரு கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் ஃபேஸ்புக் கணக்கினை பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் சேவையின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களின் மூலம் 100 சதவீத வாக்குப்பதிவு பெற முடியும் என நம்பப்படுகின்றது.

முதலிடம்

முதலிடம்

வாக்குப்பதிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் தேர்தலில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப் என்க்ரிப்ஷன் : இது தான் புது சங்கதி, உங்களுக்கு தெரியுமா.!?

இண்டர்நெட் இல்லாமல் மொபைலில் டிவி சேவை சென்னையில் தூர்தர்ஷன் அறிமுகம்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Election Commission Partners Facebook Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X