மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?- ஸ்மார்ட்போன் இருக்கா!

|

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்தோடு தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

முகாம்களில் மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய தவறிய வாக்காளர்கள் இணையதளம் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். இந்திய தேர்தல் ஆணைய வழிமுறைப்படி இளம் வாக்காளர்கள் தங்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://eci.gov.in/e-epic/ அல்லது https://www.nvsp.in/ என்ற இணையதளத்துக்குள் சென்று இ-எபிக் கார்ட் பதிவிறக்கம் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் அடுத்த பக்கத்தில் nvsp.in என்ற தளம் ஓபன் ஆகும். அதில் இ-எபிக் பதிவிறக்கம் என்ற ஆப்ஷன் காட்டப்படும்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு எண் உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி-யை சரி பார்த்து உள்ளிட வேண்டும். ஓடிபி பதிவீடு செய்தபின் இ வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் தங்களது இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்தல் ஆணைய உத்தரவின்படி அதிகாரப்பூர்வ வலைதளத்துக்குள் சென்று மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். புதிய டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டையை இதன் மூலம் பெறலாம். மின்-இபிஐசி என்பது மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை பிடிஎஃப் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர் போர்ட்டல், வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி, என்விஎஸ்பி ஆகிய தளங்கள் மூலமாக இ-இபிஐசி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதன்மூலம் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும் இதுகுறித்த விவரங்கள் அறிய 24 மணிநேரம் இயங்கும் வாக்காளர் உதவி எண் 1950-க்கு தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் பதிவு செய்யப்பட்ட வாக்காளரா என்பதை சரிபார்க்க தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு சென்று உங்கள் இபிஐசி எண் மற்றும் மாநில பின்கோடை பதிவிட்டால், உங்கள் பெயர், பகுதி எண், வாக்கு சாவடி முகவரி ஆகியவை காண்பிக்கும். அதில் பூத் ஊழியர் தொடர்பு எண்ணும் இருக்கும்.

உங்கள் பூத் ஊழியர்கள் தங்களுக்கு சீட் கொடுப்பார்கள் வாக்களிப்பதற்காக சாவடிக்குள் நுழைய அந்த பூத் சிலிப் உங்களை அனுமதிக்கும். பூத் ஊழியர்கள் அழைத்து உங்களது சிலிப்பை தவறாமல் பதிவு செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu Election 2021: How to Download Electronic Voter Id and Check EPIC Number in online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X