இ-பாஸ் நடைமுறையை ரத்தா? எச்சரிக்கும் மருத்துவர்கள்! அரசு என்ன முடிவு எடுக்கும்?

|

இ-பாஸ் நடைமுறையைத் தொடர்வதா இல்லை ரத்து செய்வதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக்காக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நிலையால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய விதி

இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய விதி

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இ-பாஸ் விதிமுறைகளில் சில தளர்வுகளை அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற பழைய நிலை இல்லாமல் இருக்கிறது. இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் ஒரு புறம் எச்சரித்துள்ளனர்.

ரத்து செய்ய கூறி வலியுறுத்தி வரும் மக்கள்

ரத்து செய்ய கூறி வலியுறுத்தி வரும் மக்கள்

மறுபுறம் மத்திய அரசு நடைமுறையில் உள்ள இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கூறி வலியுறுத்தி வருகிறது. முன்பு திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் முதல் இ-பாஸ் நடைமுறையில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, யார் விண்ணப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைகள் வருவது காரணமா?

பண்டிகைகள் வருவது காரணமா?

இந்த நிலையில் இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என பண்டிகைகள் வருவதால் தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து முடிவு செய்யத் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா?

இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுமா?

இந்த கூட்டத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா, இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டால் மக்களின் புழக்கம் அதிகமாகும் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Tamil Nadu e-Pass Is Mandatory Says Chief Secretary And Collectorates : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X