ரேஷன் அட்டை இருக்கா? மே 13 முதல் புது விதி.. கண் கருவிழி காண்பித்தால் தான் ரேஷன் பொருளா? என்னங்க சொல்றீங்க?
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து ரேஷன் கடைகளிலும் வரும் மே 13, 2024 ஆம் தேதியை தொடர்ந்து, புதிய விதி நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. புதிய விதிமுறைப்படி ரேஷன் அட்டை தாரர்கள், அவர்களுடைய கண் கருவிழியை காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தமாக 5.3 லத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் (Ration shops in India) செயல்பாட்டில் உள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 10,279 பகுதி நேர கடைகள் உட்பட, மொத்தம் 35,323 நியாய விலை ரேஷன் கடைகள் (Ration Shops In Tamil Nadu) செயல்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சம் 6,978 PDS கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடப்பதக்கது.

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை பெற மே 13ம் தேதி முதல் புது விதிமுறை (Ration Shop New Rule From May 13, 2024):
இந்த கடைகளில், ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Ration card) மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி, மாநிலத்தில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் (Family ration card) வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டை தரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதம் தோறும் ரேஷன் போர்டுகள் மற்றும் வீட்டு உணவுப்பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்கள் சரியான ரேஷன் அட்டை உரிமையாளர்களுக்கு (Ration card users) வழங்கப்படுவதை உறுதிப்படுத்த கைரேகை பதிவு (Fingerprint scan) மூலம் கார்டுதாரரின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் அட்டை உரிமையாளரின் உண்மை தன்னை சரிபார்க்கப்பட்டு பிறகே உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து ரேஷன்கடைகளிலும், கைரேகை பதிவுடன் கூடிய பாய்ன்ட் ஆஃப் சேல்ஸ் கருவி (Point of sales device) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் சில ரேஷன் கார்டு பயனர்களின் கைரேகை விபரங்களை பெறுவதில் சிக்கல் எழுவதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, கைரேகை பதிவு வேலை செய்யாத பயனர்களிடம் இருந்து கண் கருவிழி தகவல்களை (Iris registration details) பெட்ரா பின்பு, அந்த நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதை நடைமுறைப்படுத்த கண் கருவிழி பதிவ்ய் செய்யும் முறையை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

கண் கருவிழி பதிவு செய்த பிறகு ரேஷன் போர்டுகளை பெறலாம்:
இதற்கான கண் கருவிழி பதிவு செய்யும் கருவிகளை ரேஷன் கடைகளுக்கு அரசாங்கம் இப்போது வழங்கி வருகிறது. முதற்கட்ட சோதனையாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுமார் 60 முதல் 70 ரேஷன் கடைகளுக்கு இந்த கண் கருவிழி கருவிகள் மற்றும் புதிய பாயிண்ட் ஆஸ்ப் சேல்ஸ் கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த புதிய முறையை இப்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 70 ரேஷன் கடைகள் பின்பற்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
வரும் மே 13, 2024 ஆம் தேதிக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எல்லா ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் முறைப்படி அச்சிடப்பட்ட பில்கள் (digital bills) மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செயல்படாத நேரங்களில் மக்கள் கண் கருவிழி சேவையை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








