சைபர் குற்றங்களைத் தடுக்க வழி இதுதான்: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கருத்து.!
ஷாப்பிங் முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டது. குறிப்பாக மொபைல் போன் இருந்தாலே போதும் நாம் நினைத்து பொருட்களை வீட்டுக்கே எளிமையாக வரவைக்க முடியும். புதிய தொழில்நுட்ப வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
ஆனாலும் இந்த புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது முன்பு கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துத்தான் திருடினார்கள். இப்போது மொபைல்போன் மூலமாகவே எளிமையாகக் கொள்ளையடிக்கின்றனர்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு
அதாவது தற்போது மொபைல் போனில் உள்ள ஆப்ஸ்கள் மூலம் நிறைய பேர் பணம் மற்றும் பொருள் மற்றும் தகவல்களை இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேசியுள்ளார்.
Cyber Security Challenges in Modern Era எனும் தலைப்பில் கருத்தரங்கு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் கிரைம்
இந்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியது என்னவென்றால், இந்த நவீன காலத்தில் அனைத்து மக்களும் சைபர் கிரைம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம் ஆகும். குறிப்பாக ஒவ்வொரு முறை தொழில்நுட்பம் வளரும்போது, சைபர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆகிறது. இந்த சைபர் கொள்ளையர்கள் நமது கொல்லைப்புரத்தில் இருந்துகொண்டே, வெளிநாட்டில் இருப்பதுபோல பேசி நம்மிடம் எளிமையாகக் கொள்ளையடித்து விடுகிறார்கள்.
அதேபோல் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 62,000 சைபர் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன. பின்பு இந்த சைபர் குற்றங்களைத் தடுக்க திறமையான இன்ஜினீயர்கள் தேவை என்று கூறினார். குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் போன்ற இடங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் நடந்து வருகிறது என்று தெரிவித்தார் டிஜிபி சைலேந்திரபாபு.

மொபைல் போன் ஆப்ஸ்கள்
மேலும் இப்போது மொபைல் போன் ஆப்ஸ்கள் மூலம் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து வருகின்றனர். குறிப்பாக உங்களுக்கு யாராவது லிங்க் அனுப்பி, அதை கிளிக் செய்ய சொன்னாலே ஆபத்து தான். இதபோன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க போதிய விழிப்புணர்வு வேண்டும் என்று கூறியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.
ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை இழந்த பெண்
அதேபோல் சமீபத்தில் கூட Amazon நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடம் ரூ.3.15 லட்சம் இழந்ததாக 20 வயது பெண் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதாவது அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்களிடம் பெண் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாகப் பணத்தை இழந்துள்ளார். வேலை வழங்குவதாகக் கூறி மோசடி செய்வதற்கு என இந்த கும்பல் போலியான அமேசான் இணையதளத்தையே உருவாக்கி இருக்கிறது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களில் 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண்ணுக்கு சர்வதேச எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த லிங்கில் தன்னை அமேசான் நிர்வாகியாகக் காட்டி கொண்ட நபர் ஒருவர் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி இருக்கிறார். மென்பொருள் உருவாக்குநர்களின் உதவியுடன் மோசடி செய்பவர்களால் போலியான அமேசான் இணையதளம் உருவாக்கப்பட்டு பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மோசடியில் பலருக்கு போலியாக வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போலியாக வேலையை உருவாக்கி அதில் ஒரு virtual wallet உருவாக்கப்படுகிறது. இந்த வாலட்டில் பணம் செலுத்தும்படி கேட்கப்படுகிறது. பின் இந்த வாலட் இல் இருக்கும் அனைத்து பணமும் திருடப்படுகிறது. வேலை தொடர்பாக நடத்தப்படும் பல மோசடியில் இதுவும் ஒரு வழிமுறை ஆகும். பயனர்களிடம் இருந்து ஏமாற்றப்படும் பணம் அனைத்தும் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லி போலீஸ் குழுவால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








