கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்க "தடை".!

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும்படி அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

By Sharath
|

"இந்த செல்போன எவன் கண்டுபுடுச்சனோ தெரியல, எப்ப பாரு அதுக்குள்ளயே தான் இருக்க. எப்படி நீ ஒழுங்காப் படிக்க போற, மார்க் மட்டும் கம்மி ஆகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு" என்று அனைத்து பெற்றோர்களும் வீட்டில் கதறும் தாரக மந்திரம். தற்பொழுது கல்வி அமைச்சத்திற்கும் கேட்டுவிட்டது. போட்டாங்கப்பா மொபைல் போன்கு தடை.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும்படி அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக கல்லூரிகளுக்குள் செல்போன் தடை

தமிழக கல்லூரிகளுக்குள் செல்போன் தடை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியளித்துள்ளது.

மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது

மாணவ- மாணவிகளின் கவனம் சிதறுகிறது

ஏற்கனவே பள்ளிகளில் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிற நிலையில் தற்பொழுது கல்லுரிகளுக்கும் செல்போன் உபயோகிக்கத் தடைவிதித்துள்ளது அரசு கல்லூரி கல்வி இயக்கம். மாணவ- மாணவிகளின் கவனம் செல்போன் உபகோகிப்பதால் சிதறுகிறது மற்றும் கல்லூரிகளில் தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது, இதைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாடு

ஆடை கட்டுப்பாடு

கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு நிபந்தனைகள் இருந்து வருகிற நிலையில் தற்பொழுது இந்தக் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில கல்லூரிகளில் இந்தக் கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

கட்டாய தடை

கட்டாய தடை

ஏற்கெனவே கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கக் கூடாது என்று பெரும்பாலான கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைக் கல்லூரி மாணவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்போன் எடுத்து வருவதும் செல்போன் பயன்படுத்துவதும் இனி கட்டாய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி

இதை அமல்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி ஆணைபிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை கடுமையானது

தடை கடுமையானது

சிலதரப்பு கருத்துக்களும் வெளிவரத் துவங்கியுள்ளது. வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. ஆனால் முற்றிலும் கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன்களை பயன்படுத்தத் தடை என்பது கடுமையானது என்று சில கல்லூரிகள் தங்களின் கருத்துக்களைக் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Tamil Nadu: DCE Issues Notice Banning Use of Cellphones by Students on College Premises : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X