ஹாரிபாட்டர் கோட்டையில் திருமணம்: தமிழ் தம்பதிகளின் முதல் முயற்சி- இறந்த மணமகளின் தந்தையும் விழாவில் பங்கேற்பு!

|

இந்தியாவில் முதன்முறையாக தினேஷ்- நந்தினி என்ற தம்பதியனரின் மெய்நிகர் திருமண வரவேற்பு நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

மெட்டா என்ற வார்த்தை

மெட்டா என்ற வார்த்தை

வாழ்வில் ஒருமுறை என்ற கனவுடன் நடக்கும் திருமணத்தை சிறப்பாகவும், தனித்துவமான முறையில் வெகு விமர்சியாக செய்ய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதன்படி தமிழகத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் ஜனகநந்தின என்வர்கள் தங்களது திருமண வரவேற்பை மெட்டாவெர்ஸ் முறையில் நடத்த இருக்கின்றனர். மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை சமீப கால பேசுபொருளாகவே மாறி வருகிறது. கடந்த சில நாட்களில் ஒரு முறையாவது மெட்டா என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். மெட்டாவெர்ஸ் என்பது மாயாஜால உலகம் ஒரு 3டி தொழில்நுட்பம் எதிர்கால பலகட்ட முன்னேற்ற தொழில்நுட்பம் என பல வார்த்தைகளில் குறிப்பிடலாம்.

விர்ச்சுவல் திருமண வரவேற்பு

விர்ச்சுவல் திருமண வரவேற்பு

மெட்டாவெர்ஸ் மூலமாக தமிழக ஜோடிகள் நடத்த இருக்கும் விர்ச்சுவல் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு பெரும் பாராட்டுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதில் தினேஷ் என்பவர் ஐஐடி மெட்ராஸில் பிராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். இவருக்கும் ஜனகநந்தினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் வரைக்கும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் ஆனது பிப்ரவரி 6 ஆம் தேதி சிவலிங்கபுரம் கிராமத்தில் திருணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது

பல்வேறு முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது

கொரோனா காலக்கட்டம் தொடங்கிய காலம் முதல் பல்வேறு முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை மற்றும் குறிப்பிட்ட நபர்களுடன் திருமணம் என பல்வேறு முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் ஜனகநந்தினி தம்பதியனரின் திருமண வரவேற்பு நிகழ்வு மெட்டாவெர்ஸ் முறையில் நடத்தப்பட இருக்கிறது. சிவலிங்கபுரத்தில் மாலை மாற்றி திருமணம் செய்த பிறகு தங்களது லேப்டாப்பை திறந்து விர்ச்சுவல் முறை திருமண நிகழ்வை நடத்த இருக்கின்றனர்.

விர்ச்சுவல் முறையில் சாத்தியமாக்க முயற்சிகள்

விர்ச்சுவல் முறையில் சாத்தியமாக்க முயற்சிகள்

இருவரும் தங்களது வெளிமாநில வெளிநாட்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது ஆனால் கொரோனா காலக்கட்டம் என்பதால் இதற்கு சாத்தியம் இல்லை இருப்பினும் தினேஷ் இதை விர்ச்சுவல் முறையில் சாத்தியமாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

தினேஷ் நந்தினி ஜோடியின் மெய்நிகர் முறை திருமண வரவேற்பு

மெட்டாவெர்ஸ்-ல் தினேஷ் நந்தினி ஜோடியின் மெய்நிகர் முறை திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இதில் திருமண தம்பதிகளின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் விர்ச்சுவல் முறையில் பங்கேற்க இருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இறந்துபோன மணமகள் நந்தினியின் தந்தை ராமசாமியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என கூறப்படுகிறது. பத்திரிக்கையில் இருந்தால் தான் ஒருசில விஐபி திருமண நிகழ்வில் பங்கேற்க முடியும். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரத்யேக லிங்க் கிடைக்கப்பெற்ற நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

ஹாரிபாட்டர் மாயஜால உலகின் பின்னணி

ஹாரிபாட்டர் மாயஜால உலகின் பின்னணி

மேலும் இந்த விர்ச்சுவல் வரவேற்பு நிகழ்வானது ஹாரிபாட்டர் மாயஜால உலகின் பின்னணியுடன் நடக்க இருக்கிறது. மணமக்கள் ஹாரிபாட்டர் ரசிகர்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் அன்பளிப்புத் தொகை அதாவது மொய்ப்பணத்தை கூகுள் பே மூலமாகவோ அல்லது கிரிப்டோகரன்ஸி முறையிலோ செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும் ஒவ்வொரு நபர்களும் ஹாரிபாட்டரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் மூலமாக பங்கேற்கலாம் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்து நலம் விசாரித்து நட்பை பகிர்ந்து பங்கேற்காலம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

இதுபோன்ற முயற்சி செய்வது முதன்முறை

இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சி செய்வது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மெட்டாவெர்ஸ் முறையில் நடக்க இருக்கும் இந்த திருமணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து பலர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா போன்ற பகுதிகளில் இணையவழி திருமண கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இதுகுறித்து தினேஷ் கூறுகையில், தனக்கு திருமணம் நிச்சயம் ஆன உடன் தாங்கள் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு நடத்த திட்டதாகவும் இதற்கு தனது மனைவியும் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறிப்பிட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tamil Nadu couple are set to host a virtual metaVares wedding reception with a Harry Potter theme

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X