Home
News

வீட்டுக்கு வீடு புது HD செட் டாப் பாக்ஸ்.. தமிழ்நாடு அரசு கேபிள் TV அதிரடி.. இதுவும் இலவசமா? மாத கட்டண விலை?

அந்தா வருது, இந்தா வருது என்று நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த TACTV எச்டி செட் டாப் பாக்ஸ் (TACTV HD Set Top Box) இப்போது தமிழ்நாட்டிற்குள் ஒவ்வொரு முக்கிய மாநகரமாக விநியோகம் செய்யப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் துல்லியமான கேபிள் டிவி அனுபவத்தை மக்களுக்கு வழங்க வீட்டுக்கு வீடு புதிய எச்டி செட் டாப் பாக்ஸ் கருவிகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (cable TV) வழங்கவுள்ளது. இது இலவசமாக வழங்கப்படுமா? மாதாந்திர கேபிள் டிவி கட்டணம் எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற தகவலை முழுவதுமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மலிவு விலையில் கேபிள் டிவி சேவையை (Cable TV network) வழங்கி வரும் நிறுவனமாக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. TACTV ஏற்கனவே மாநிலம் முழுவதும் 17,230 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் (cable TV operators) மூலம் சுமார் 36.40 லட்சம் MPEG4 செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி சேவை நடத்தி வருகிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய HD Tv செட் டாப் பாக்ஸ்களை TACTV வழங்கவுள்ளது.

வீட்டுக்கு வீடு புது HD செட் டாப் பாக்ஸ்.. தமிழ்நாடு அரசு கேபிள் TV

தமிழ்நாடு அரசு கேபிள் TV அதிரடி.. வீட்டுக்கு வீடு புது HD செட் டாப் பாக்ஸ்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அமைப்பு அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் தமிழக மக்களுக்கு தரமான சேவையை வழங்க இந்த TACTV சேவை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரை 36.04 லட்சம் வாடிக்கையாளர்கள் சாதாரண செட் டாப் பாக்ஸ் கருவி மூலம் கேபிள் டிவி அனுபவத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த செட் டாப் பாக்ஸ்கள் MPEG4 கருவி என்பது (MPEG4 TV Set Top Box) குறிப்பிடத்தக்கது. இதில் ஒளிபரபரப்படும் வீடியோக்கள் ஸ்டாண்டர்ட் தரத்தில் இருக்கும்.

SD தரத்தில் கேபிள் டிவி அனுபவத்தை அனுபவிக்க விரும்பாத மக்கள் பலர், HD தரம் தேடி தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை நாட துவங்கியுனர். இதனால், TACTV சேவையில் சிறிய சரிவு காணப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக HD சேவை வேண்டும் என்று கேட்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் MPEG4 செட் டாப் பாக்ஸ் மூலம் அதை அடைவது சாத்தியமற்றது.

தமிழகத்தில் புதிய HD Set Top Box கருவி:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையில் எச்டி தர சேனல்களை வழங்க வேண்டுமென்றால், கட்டாயம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அமைப்பு (TN government cable tv) புதிய HD Set Top Box கருவியை உருவாக்க வேண்டும். இதற்கான வேலைகளை தமிழக அரசு சமீபகாலமாக சத்தமில்லாமல் செய்து வந்தது. இப்போது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மற்றும் TACTV சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV)-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தற்போது சுமார் 50 லட்சம் HD செட்-டாப் பாக்ஸ்களை வாடகைக்கு எடுப்பதற்கான டெண்டரை மாநில அரசு அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பட்ஜெட்டில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய TACTV HD சேவைக்கு கட்டணம் எவ்வளவு இருக்கும்?

இதன் விளைவாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வீடு வீடாக புதிய எச்டி செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டு, பயனர்களின் கேபிள் டிவி சேவை மேம்படுத்தப்படும் என்று கூற்படுள்ளது. இதற்கு முன்பு TACTV கேபிள் கனெக்ஷன் பெரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட் டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. புதிய HD செட் டாப் பாக்ஸையும் TACTV இலவசமாக வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்போது 200-க்கும் மேற்பட்ட சேனைகளுடன் சேவைக்கு ரூ.140 + GST வசூலிக்கப்படுகிறது. ஆனால், எச்டி சேவையின் கட்டணங்கள் 20 முதல் 50 ரூபாய்க்குள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளது. புதிதாக வழங்கப்படும் டிஏசிடிவி எச்டி செட் டாப் பாக்ஸ் உடன் 1 HDMI கேபிள், அடாப்பட்டர் மற்றும் ரிமோட் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tamil Nadu Cable TV Update New TACTV HD Set Top Box Coming Soon Check Price and Availability Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X