தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021: மொபைலில் துல்லியமாக அறியலாம்- ஆன்லைனில் எளிய வழிமுறைகள்!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை என்பதால் தனிமனித இடைவெளி போன்ற வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்ட நடைபெற இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை விவரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், விவரங்கள் கண்ட்ரோல் யூனிட்களில் பதிவாகி இருக்கும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தல் அலுவலர் கட்டுப்பாட்டு இயந்திரத்தை முகவர்களுக்கு உயர்த்தி காண்பிப்பார். அதேபோல் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி விவரம், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள், மொத்தமாக எத்தனை வாக்குகள் பதிவானது மற்றும் எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற விவரங்கள் திரையில் இருக்கும்.

அறிந்துக் கொள்வதற்கு பல வழிகள்
மேலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கான எதிர்பார்ப்பை பெரிதளவு ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை அறிந்துக் கொள்வதற்கு பல வழிகள் இருக்கிறது. இதில் ஆன்லைன் மற்றும் மொபைல் பயன்பாட்டு மூலமாக வாக்கு எண்ணிக்கை முடிவுகளை எப்படி அறிந்துக் கொள்வது என்பதை பார்க்கலாம்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையானது நாளை (மே-2) காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. Election Commission of India-ன் இருக்கும் election result portal தேர்வை கிளிக் செய்து காணலாம். இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் என ஒரு பக்கம் அமைத்திருக்கிறது.

வோட்டர் ஹெல்ப்லைன் செயலி (Voter Helpline App
அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் Election Commission of India-ன் வோட்டர் ஹெல்ப்லைன் செயலி (Voter Helpline App) தேர்தல் முடிவுகளை அறியலாம். இதில் பல்வேறு பயன்பாட்டு அம்சம் இருக்கிறது. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.

eci.gov.in வலைதளம்
இதை அறிவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் eci.gov.in வலைதளத்தில் தேர்தல் முடிவுகளை ஆணையம் வெளியிடவில்லை. தேர்தல் முடிவுகளை காண்பதற்கு eciresults.nic.in என்ற வலைதளத்தை அணுகவும். இதில் பயனர்கள் தொகுதி வாரியாக விவரங்களை கண்காணிக்க முடியும்.

வாக்கு எண்ணிக்கை முடிவு
Voter Helpline App பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதை ஓபன் செய்யும் போது மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழையலாம். மேலும் உள்நுழைவை தகர்த்து முகப்பு பக்கத்துக்கும் செல்லலாம். 6 முக்கிய விருப்பங்கள் இருக்கும் இதில் முடிவுகள் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதில் தங்களுக்கு முடிவு தெரிய வேண்டிய தேவையான மாநிலத்தை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications