Home
News

தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்!

கொரோனா வைரஸின் தாக்கம் அனைத்து தொழில்களிலும் பலவீனமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக நேரில் சந்திப்புகள் தேவைப்படும் தொழில்களில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதால், நாடு முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலம் தொழிலை துவங்கியுள்ள பாலியல் தொழிலாளர்கள்

ஆன்லைன் மூலம் தொழிலை துவங்கியுள்ள பாலியல் தொழிலாளர்கள்

கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. சென்னையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வரும் 35 வயதான பாலியல் தொழிலாளி சுனிதா (பெயர் மாற்றப்பட்டது) கடந்த இரண்டு மாதங்களாகத் தொழிலுக்குச் செல்ல முடியாமல் தனது வீட்டிலேயே தங்கியிருக்கிறார். இதனால் தற்பொழுது தனது தொழிலைப் பாதுகாப்பாக ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளார் சுனிதா.

வீடியோ அழைப்பு மூலம் சம்பாத்தியம்

வீடியோ அழைப்பு மூலம் சம்பாத்தியம்

ஊரடங்கு காலத்தில் தனிநபர் சந்திப்பைத் தவிர்த்து, சமூக விலகலை கடைப்பிடித்து பாதுகாப்பாகத் தனது பாலியல் தொழிலை தற்பொழுது ஆன்லைன் மூலம் செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரவும், தனது குழந்தைகள் தூங்கியபின், அவர் மேக்கப் அணிந்து, தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ அழைப்பு செய்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கொஞ்சம் பணம் சம்பாதித்து, அதை வைத்து தனது குழந்தைகளைப் பார்த்து வருகிறார்.

எதுவும் இல்லாமல் சிரமப்படுவதை விட இது மேல்

எதுவும் இல்லாமல் சிரமப்படுவதை விட இது மேல்

எதுவும் இல்லாமல் சிரமப்படுவதை விட, இப்படி எதையாவது செய்து சம்பாதிப்பது இந்த இக்கட்டான காலத்தில் தங்களுக்குக் கைகொடுக்கிறது என்று கூறியுள்ளார். வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதும் தனது வருமானம் குறையத் தொடங்கியது என்று சுனிதா வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். அப்போது இருந்து தனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்க இந்த ஆன்லைன் முயற்சியைக் கையில் எடுத்ததாகக் கூறியுள்ளார்.

பாலியல் சேவை மற்றும் கட்டணமும் ஆன்லைன் பக்கமாக மாறியுள்ளது

பாலியல் சேவை மற்றும் கட்டணமும் ஆன்லைன் பக்கமாக மாறியுள்ளது

சில வாரங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்கு வீடியோ அழைப்புகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். COVID-19 தாக்கப்பட்ட பின்பு, ஸ்மார்ட்போன் மற்றும் இணைய அணுகலைக் கொண்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் வர்த்தகத்தை ஆன்லைன் இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். வீடியோ அழைப்பு மூலம் அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இவர்களின் கட்டணமும் ஆன்லைன் பக்கமாக மாறியுள்ளது.

வாடிக்கையாளர்களே ஆன்லைன் ரீசார்ஜ் செய்துவிடுகிறார்கள்

வாடிக்கையாளர்களே ஆன்லைன் ரீசார்ஜ் செய்துவிடுகிறார்கள்

வாடிக்கையாளர்களுடன் வீடியோ அழைப்பில் தங்களின் சேவையைத் துவங்குவதற்கு முன்பே, அந்த வாடிக்கையாளர் இவர்களின் GPay அல்லது போன்பே போன்ற இ-வால்லெட் மூலம் கட்டணங்களைச் செலுத்திவிடுகிறார்கள். பாலியல் தொழிலாளர்களின் மொபைல் கணக்கில் போதுமான டேட்டா இருப்பு இல்லை என்றால், அவர்களின் வாடிக்கையாளர்களே அவர்களுக்காக ரீசார்ஜ் செய்துவிடுகிறார்கள்.

பாலியல் தொழிலார்கள் மத்தியில் தொழில்நுட்ப அணுகல் அதிகரித்துள்ளது

பாலியல் தொழிலார்கள் மத்தியில் தொழில்நுட்ப அணுகல் அதிகரித்துள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, திருநங்கைகளுக்கு விர்ச்சுவல் பாலியல் சேவைகளை வழங்குவது ஒப்பீட்டளவில் எளிதானதாக இருக்கிறது, ஏனெனில் இவர்கள், பெண் பாலியல் தொழிலாளர்களை விடத் தொழில்நுட்பத்துடன் அதிக அணுகல் இருப்பதாக அறிக்கையின் முடிவு சொல்கிறது. திருநங்கைகளுடன் ஒப்பிடுகையில் பெண் பாலியல் தொழிலாளர்கள் 30 சதவீதம் பேர் மட்டுமே ஸ்மார்ட்போன் அணுகலுடன் இருக்கிறார்கள்.

90 சதவீத ஸ்மார்ட்போன் தொழிலாளர்கள்

90 சதவீத ஸ்மார்ட்போன் தொழிலாளர்கள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, திருநங்கைகளின் பாலியல் தொழிலாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இளைய பாலியல் தொழிலாளர்கள் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக அணுகுவதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் ராஜேஷ் உமா தேவி கூறியுள்ளார்.

இதிலும் எங்களுக்கு சிக்கல் உளள்து என்று குமுறும் தொழிலாளர்கள்

இதிலும் எங்களுக்கு சிக்கல் உளள்து என்று குமுறும் தொழிலாளர்கள்

தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்க தற்பொழுது பாலியல் தொழிலாளர்கள் இந்த வீடியோ அழைப்பு முறையைக் கையில் எடுத்துள்ளனர். இருப்பினும், சில வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்புகளைப் பதிவுசெய்யக்கூடும் என்பதால் தனியுரிமை சிக்கல்களும் இதில் உள்ளது என்று பாலியல் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

உலகளவில் உள்ள பாலியல் தொழிலார்களுக்கு இதுதான் நிலை

உலகளவில் உள்ள பாலியல் தொழிலார்களுக்கு இதுதான் நிலை

இருப்பினும் கொரோனாவிடம் மாட்டிக்கொள்ளாமல் இந்த இக்கட்டான காலத்தை இப்படித் தான் கடந்தாக வேண்டும் என்கின்றனர் பாலியல் தொழிலாளர்கள். இதனால், தங்கள் வட்டத்தில் உள்ள பல பாலியல் தொழிலாளர்களும் தங்களின் தொழிலை பாதுகாப்பாக ஆன்லைன் பக்கமாக நகர்த்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் தற்பொழுது உலகளவில் உள்ள பாலியல் தொழிலார்கள் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள் என்று செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Tamil Nadu Adult Workers Have Taken Their Trade To Online Through Video Calling : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X