சென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.
சில நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார், அப்போது கீபேட் மேலே சிறிய அளவு கேமராவை பார்த்துள்ளார், பின்பு அப்போதே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

கான்ஸ்டபிள் சாலையில் ..
சில நாட்களுக்குசென்னை அயனாவரம் பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் சாலையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி இயந்திரத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார், அப்போது கீபேட் மேலே சிறிய அளவு கேமராவை பார்த்துள்ளார், பின்பு அப்போதே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ஸ்கிம்மர் கருவி
மேலும் இயந்திரத்தை சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும் சிறிய கேமராவும் இயந்திரத்தை சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும், சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

கண்ணகி நகர்
இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் சொகுசு விடுதியில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூவர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியே செல்லும்போது புதுவிதமான மின்னணு கருவிகளை உடன் கொண்டு செல்வதாகவும் அவர்களது நடவடிக்கைகளும் சந்தேகத்துகிடமாக இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்
ஏற்கனவே சில ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தைத் திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உஷாரான போலீசார், ஹாலிடே விடுதிக்கு விரைந்தனர். பின்பு அங்கு தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிபோமிர், (lyubomir) போரிஸ் ,(Boris) நிக்கோலே, (NIkolay) ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் அட்டைகள், 7.5 லட்ச ரூபாய் , 10 ஆயிரம் டாலர் , போலி கார்டு தயாரிக்கும் மெஷின், லேப்டாப், செல்போன்கள், 3 சூட்கேஸ் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை பல்கேரியா செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்.

18 லட்ச ரூபாய்
இதுவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 18 லட்ச ரூபாய் வரை பல்கேரியர்கள் திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி தடுப்பு பிரிவில்...
மேலும் திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவின் வங்கி தடுப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது பல்கேரிய தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications