அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்!

By Super
|
அட! இனி இப்படியும் தமிழ் வளர்க்கலாம்!

மழலைகள் அழகாகவும், எளிதாகவும் தமிழை கற்று கொள்ள புதிய வழியினை வகுக்கிறது தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ் என்ற அப்ளிக்கேஷன். இந்த அப்ளிக்கேஷனை ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

ஆப்பிளின் ஐடியூன்ஸில் இருந்து இந்த தமிழ் லர்னிங் ஃபார் கிட்ஸ் என்ற இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து, குழந்தைகளிடம் மழலையில் இருந்தே தமிழ் மொழியினை வளர்க்கலாம்.

இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக தமிழ் கற்று கொள்ள நிறைய வழிகள் கையாளப்பட்டுள்ளது. இதில் பஸில் போன்ற விளையாட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாறி இருக்கும் படங்களையும், வார்த்தைகளையும் சரியாக இணைக்க வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் மாற்றி அமைக்கப்பட்ட வார்த்தைகளை, வரிசைபடுத்த வேண்டும். இதன் மூலம தமிழ் எழுத்துக்களை விளையாட்டாக குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் தமிழ் மொழியை தினிக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் விளையாடுவது போல் ஆர்வமாக தமிழை படிப்பார்கள்.

அதன் பிறகு படம் பார்த்து கதை சொல்வது போல படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை சரியாக கண்டுபிடித்து படித்துக்காட்டுவது போன்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விஷயங்களை புத்தகத்திலேயே படிக்கலாமே! எதற்கு ஆப்பிள் ஐஓஎஸ் அப்ளிக்கேஷன்? என்ற கேள்வியும் வரும். ஆனால் இன்றைய குழந்தைகள் புத்தகத்தில் படிப்பதைவிட, மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களிலும் தான் படிக்க அதிக ஆர்வம் கொள்கின்றனர். இதனால் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்த இது ஒரு

சிறந்த வழி.

தமிழ் வளர்க்க வேண்டும் என்ற இந்த வாசகத்தினை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த வாசகத்தினை பெரியவர்களுக்கு சொல்வதை விட, குழந்தைகளின் மனதில் பதிய வைப்பது தான் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X