"அப்படியெல்லாம் இல்ல"- இரண்டே நாட்களில் தமிழ் மொழி அந்த இணையதளத்தில் இருக்கும்: மத்திய அரசு உறுதி!
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறைந்து வரும் பாதிப்பு எண்ணிக்கை
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில்., ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கூறினார்.

சோகங்களில் இருந்து மீண்டு வருவோம்
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்காலப் புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும்! கொரோனா தொற்றை வெல்வோம், நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்! என குறிப்பிட்டார்.

தமிழ் மொழி இணைக்க வலியுறுத்தல்
கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யும் இணையதளமான கோவின் இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்தது. இருப்பினும் அடுத்ததாக கூடுதல் மொழிகள் இணைக்கப்பட்டது இதில் தமிழ் மொழி இல்லாமல் இருந்தது. இதையடுத்து தமிழ் மொழியையும் இணைக்கும்படி முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

இரண்டே நாட்களில் தமிழ் மொழி இணைக்கப்படும்
இதுகுறித்து மத்திய அரசு அளித்த பதில் குறித்து பார்க்கையில், கோவின் இணையதளத்தில் படிப்படியாக முன்னேற்றம் செய்து பல மாநில மொழிகள் இணைக்கப்பட்டு பயன்பாடுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு தினங்களில் தமிழ் மொழி இணைக்கும் வசதி செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.கோவின் இணையதளத்தில் முகப்பில் மேற்புற இடதுபக்கத்தில் A என்ற எழுத்துடன் தேர்வு காண்பிக்கப்படும். தற்போதுவரை இதை கிளிக் செய்யும்போது ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே காண்பிக்கப்படும். ரிஜிஸ்டர் மற்றும் லாக்-இன் என்ற தேர்வை கிளிக் செய்தவுடன் இடதுபுற மேற்புறத்தில் அதே A என்ற தேர்வை கிளிக் செய்யும் போது கூடுதல் மொழிகள் காண்பிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். கோவின் இயங்கதளமானது கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர முறையில் கண்காணிக்க அனுமதிக்கிறது. மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் அதை பொதுமக்களுக்கு செலுத்தவும் இந்த இயங்குதளம் பயன்படுகிறது. இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

கோவின் பயன்பாட்டை பதிவு செய்வது எப்படி
- கோவின் பயன்பாட்டின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
- கோவின் செயலி கூகுள் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தற்போதுவரை இணைப்பு இன்னும் நேரலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தடுப்பூசிக்கான தேதியை தேர்ந்தெடுக்ககலாம். அதன்பின் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
- இவை அனைத்தும் முடிந்ததும் தடுப்பூசி எடுப்பதற்கான தேதி மற்றும் நேரம் காண்பிக்கப்படும்.
- அனைத்து கேள்விகளையும் பூர்த்தி செய்தபிறகு இறுதி ஒப்புதல் தொகுதி பயனாளிகளுக்கு ஒரு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும். அதேபோல் ஒருவர் தடுப்பூசி போட்டப்பிறகு க்யூஆர் அடிப்படையிலான சான்றிதழ்கள் உருவாக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications