தமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்!

|

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமானோர் சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர்களிடம் ஏதாவது சமூகவலைதளங்களில் கண்டிப்பாக கணக்கு இருக்கும். ஏணைய கருத்துகளை பலரும் தங்களது சொந்த மொழியில் பகிரவே விரும்புகின்றனர்.

தமிழ் மொழியில் கருத்துக்கள்

தமிழ் மொழியில் கருத்துக்கள்

அதன்படி ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் மொழியில் டைப் செய்து கருத்துகளை பகிர்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். இந்த வழிமுறைகளை பயன்படுத்தி வாட்ஸ்அப், பேஸ்புக், வைபர் உள்ளிட்ட பல தளங்களில் தமிழில் டைப் செய்து கருத்துகளை பகிரலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரை அணுகலாம்

கூகுள் ப்ளே ஸ்டோரை அணுகலாம்

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றாலும் இந்த வழிமுறைகள் கைக்கொடுக்கும். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த வழிமுறைகளை கையாள கூகுள் ப்ளே ஸ்டோரை அணுகலாம். ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழில் கருத்துகளை பதிவிடுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

கூகுள் இண்டிக் பயன்பாடு

கூகுள் இண்டிக் பயன்பாடு

கூகுள் இண்டிக் பயன்பாடு மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். தினசரி நூறாயிரக்கணக்கான பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்து காரணம் இதை மிக எளிமையாகவே கையாளம். விருப்பப்படி பயன்பாட்டை தேர்ந்தெடுக்கலாம். கூகுள் இண்டிக் கீபோர்டில் இரண்டு முறையில் தமிழில் டைப் செய்யலாம். ஒன்று ஒலி எழுப்பி அதாவது வாசித்துக் காட்டி தமிழில் டைப் செய்யலாம். அதேபோல் தமிழ் ஸ்கிரிப்டை டைப் செய்தும் அனுப்பலாம்.

கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000!கரும்பு திண்ண கூலியாம்- வேலை: பீட்சா சாப்பிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்கனும்., சம்பளம்: ரூ.36,000!

Sellinam செயலி

Sellinam செயலி

Sellinam (செல்லினம்), ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட் பயன்பாட்டில் செல்லினம் ஒன்றாகும். இது ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் தமிழ் டைப் செய்ய அனுமதிக்கிறது. எளிமையாக கையாள முடியும் இந்த பயன்பாட்டில் டார்க் மோட் அல்லது தீம்கள் மாற்றி பயன்படுத்தலாம். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்ற இரண்டு முறையில் தமிழை டைப் செய்யலாம். ஆங்கில சொற்களை பயன்படுத்தி தமிழ் எழுத்தை டைப் செய்யலாம். நேரடியாக தமிழை டைப் செய்ய தமிழ் 99 முறையை பயன்படுத்தலாம்.

ஸ்விஃப்கீ பயன்பாடு

ஸ்விஃப்கீ பயன்பாடு

ஸ்விஃப்கீ(Swifkey) பயன்பாட்டின் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் எளிதாக தமிழை டைப் செய்யலாம். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் 5 மில்லியன் பயன்பாட்டு நிறுவல்களை தாண்டியிருக்கிறது. இதில் கிடைக்கும் பல கண்கவர் பயன்பாடுகளை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் அம்சமாகும். கீபோர்ட் அளவையும் ஐந்து அளவுகளில் மாற்றி பயன்படுத்தலாம்.

ஜிபோர்ட்: கூகுள்கீபோர்ட்

ஜிபோர்ட்: கூகுள்கீபோர்ட்

ஜிபோர்ட் ஒரு பிரபலமான கீபோர்ட் பயன்பாடாகும். கூகுள் ஜிபோர்ட் இது பன்மொழி பயன்பாடாகும். ஜிபோர்ட் பயன்பாட்டில் தமிழில் எளிதாக டைப் செய்யலாம். இதன் தனித்துவ அம்சம் சமீபத்தில் ஜிபோர்ட் கீபோர்டில் உள்ளமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு அம்சம் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் டைப் செய்யும்போது இடையிலேயே ஒரு வார்த்தையை விரைவாக மொழிபெயர்ப்பு செய்யலாம். தனித்தனியாக தமிழ் வார்த்தைகள் இருக்கும் இதில் த்+ஈ என வேகமாக டைப் செய்யும்போது தீ என டைப்பாகும்.

கூகுள் ஹேண்ட்ரைட்டிங் இன்புட்

கூகுள் ஹேண்ட்ரைட்டிங் இன்புட்

பிற அனைத்து பயன்பாடுகளைவிடவும் கூகுள் ஹேண்ட்ரைட்டிங் இன்புட் பயன்பாடு மிக எளிதாக கையாளலாம். இதில் தமிழில் எழுதி தமிழ் வார்த்தையை டைப் செய்யலாம். இதில் காட்டப்படும் கீபோர்ட்டில் தமிழ் வார்த்தைகளை நேரடியாக எழுதலாம். இந்த பயன்பாட்டை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tamil Keyboards: 5 Best Tamil Keyboards for your Mobile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X