உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தாத தமிழனே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்து,பல துறைகளில் தலை நிமிர்ந்து தமிழர்கள்

|

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தாத தமிழனே இல்லை என்று தான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்து, பல துறைகளில் தலை நிமிர்ந்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த தமிழ் தொழிலதிபர்களின் பட்டியலைத் தான் நாம் பார்க்கப்போகிறோம்.

உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள்!

தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இவர்கள், பல துறைகளில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி உலகம் பேசும்படி விளங்கும் தலைசிறந்த தமிழர் தொழிலதிபர்களைப் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.

1. சுந்தர் பிச்சை:

1. சுந்தர் பிச்சை:

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் மதுரையில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் முழு பெயர் பிச்சை சுந்தரராஜன், சென்னையில் தனது பள்ளி வாழ்க்கையை முடித்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கராக்பூர் கல்லூரியில் தனது மெட்டலர்ஜி என்ஜினீரிங்கை முடித்தார்.

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இவர் கூகுள் கிறோம் மற்றும் கூகுள் கிறோம் ஓஎஸ் உருவாக்கும் குழுவில் பணியாற்றி வந்தார். கூகுள் டிரைவ் உருவாக்குவதில் இவரின் பங்கு அதிகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் கூகுளின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்ததினால் 2015 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை:காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.!அதிகம் படிக்கப்பட்டவை:காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.!

2. முருகன் ப்பால்:

2. முருகன் ப்பால்:

முருகன் பழனியப்பன் என்ற முழு பெரியார் கொண்ட முருகன் ப்பால், மதுரையில் 1966 ஆம் ஆண்டு பிறந்து, மதுரை தியாகராஜர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். உலக சந்தையில் K-12 பாடநூல் பொருட்களின் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பான CK-12 அறக்கட்டளையின் துணை நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து உலகம் பாராட்டும் பல செயல்களைச் செய்துகாட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் பிரமித்த மனிதர்களில் இவரும் ஒருவர், அதிலும் இவர் தமிழர் என்பது சிறப்பு.

3. நவீன் செல்வதுரை:

3. நவீன் செல்வதுரை:

உலகின் சிறுவயது இணையத் தொழிலதிபர் மற்றும் இடம் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளமான ஃபோர்ஸ்கொயர்.காம் என்ற இணை தளத்தின் நிறுவனரான நவீன் செல்வதுரை 1982 ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்தார்.

இவர் தற்பொழுது ஸ்டார்ட் அப் ஸ்டூடியோ எக்ஸ்பாவில் பணிபுரிந்து வருகிறார். உபேர் மற்றும் ஸ்டம்பில் அப்பான் நிறுவனத்தின் ஒரு முக்கிய பங்குதாரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சிறு வயதில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்த இளைஞர் என்றும், உலகின் சிறுவயது தொழிலதிபர் என்றும் அதிகம் பாராட்டப்பட்டு சிகரம் தொட்ட தமிழர் இவர்.

அதிகம் படிக்கப்பட்டவை:உயிருக்கு போராடும் நேசமணியை காண தமிழகம் வந்தார் மோடி-அதிரவிட்ட மீம்ஸ்!அதிகம் படிக்கப்பட்டவை:உயிருக்கு போராடும் நேசமணியை காண தமிழகம் வந்தார் மோடி-அதிரவிட்ட மீம்ஸ்!

4. இந்திரா நூயி:

4. இந்திரா நூயி:

உலகின் மிகப் பெரிய இணையவழி வணிக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் டைரக்டர் போர்டு கமிட்டி தலைவர்களில் முக்கியமான நபர் இவர். அமெரிக்க இந்தியரான இவர் சென்னையில் பிறந்தார், தனது கல்லூரி படிப்பை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் யூனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முடித்து, பின் அமெரிக்கா வந்தடைந்தார்.

உலகின் மிகச் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து சாதனை படைத்த தமிழர் இவர் தான். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட உலகின் மிகச் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்தவர் இவர் என்பது கூடுதல் பெருமை.

அதேபோல் இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலில், முதல் பெண் இயக்குநராக இந்திரா நூயி சேர்க்கப்படுவார் என்று 2018 ஆம் ஆண்டில் ஐசிசி தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5. அல்லிராஜா சுபாஷ்கரன்:

5. அல்லிராஜா சுபாஷ்கரன்:

இலங்கையைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான அல்லிராஜா சுபாஷ்கரன் என்ற இவர், லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவராவர். இவர் துவங்கிய லைக்கா மொபைல் நிறுவனம், தற்போது சுமார் 17 நாடுகளில், 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது.

லைக்கா புரொடக்க்ஷன் நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே, பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்குத் தயாரிப்பு செய்தது இவரின் லைக்கா நிறுவனமே. குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடித்த 2.0 திரைப்படம், இளைய தளபதி விஜய் நடித்த கத்தி போன்ற திரைப்படங்கள் இவரின் லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உருவாக்கியது. உலக மொபைல் சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட தமிழர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

அதிகம் படிக்கப்பட்டவை:சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!அதிகம் படிக்கப்பட்டவை:சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!

Best Mobiles in India

English summary
Tamilian CEOs, Entrepreneurs in the US, Sundar Pichai, and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X