பட்டியலில் இருக்கு: தலிபான்களை ஆதரிக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்கு தடை: பேஸ்புக் நிறுவனம் அதிரடி!

|

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து உலக நாடுகள் தங்கள் நாட்டு தூதரங்களை காலி செய்யும் பணிகளையும், தங்கள் நாட்டவர்களை மீண்டும் அழைக்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறும் அச்சுறுத்தலும் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய விவகாரம்

முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய விவகாரம்

ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு செயலர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்திய தூதராக இருந்த ருதேந்திர டாண்டன் தில்லி திரும்பினார். இவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் ஆப்கன் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நிபுணர்களின் பிரத்யேக குழு

ஆப்கானிஸ்தான் நிபுணர்களின் பிரத்யேக குழு

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஆப்கான் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிளர்ச்சி குழுவுடன் தொடர்புடைய உள்ளடக்கம் குறித்து கண்காணிக்கவும் அவைகளை அகற்றுவதற்கும் ஆப்கானிஸ்தான் நிபுணர்களின் பிரத்யேக குழு இருப்பதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. சமூகவலைதளமான பேஸ்புக், தலிபான்கள் மற்றும் அதன் தளங்களில் இருந்து ஆதரவளிக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமூகவலைதளங்களை பயன்படுத்தி செய்திகள்

சமூகவலைதளங்களை பயன்படுத்தி செய்திகள்

பல ஆண்டுகளாக தலிபான்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தி அதன் செய்திகளை பரப்பி வருகின்றன. தலிபான்கள் அமெரிக்க சட்டத்தின்படி ஒரு பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேஸ்புக் நிறுவனம் அச்சுறுத்தல் கொள்கைகளின் கீழ் இந்த சேவையை தடை செய்துள்ளது. அதாவது தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடன் பராமரிக்கப்படும் கணக்குகளை தாங்கள் அகற்றி விட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பேஸ்புக் நிறுவன கணக்குகள் முடக்குவதாக பேஸ்புக் அறிவித்த நிலையில், தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலிபான்கள் நிர்வாக விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலிபான்கள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு

தலிபான்கள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு

இதுகுறித்து பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், தலிபான்கள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு, தங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகள் பட்டியலில் தலிபான்கள் இடம்பெற்றிருக்கிறது. எனவே அந்த அமைப்பை ஊக்கப்படுத்தும் கருத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது. தலிபான்களுக்கு தொடர்புடைய கணக்குகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Talibans and their Supporting contents Related facebook, whatsapp account Ban: Source Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X