Home
News

அட்ரா சக்கை.. PhonePe ஆப்பில் இப்படி ஒரு வசதியா! உடனே உங்க ATM கார்டு இல்லனா.. டெபிட் கார்டை எடுங்க!

கூகுள் பே (Google Pay) ஆப்பிற்கு அடுத்தபடியாக இருந்த பேடிஎம் (Paytm) ஆப்பின் "கதை" மார்ச் 15 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில்.. இந்திய யுபிஐ பேமண்ட் மார்க்கெட்டில் போன்பே (PhonePe) ஆப்பிற்கு ஒரு முக்கிய இடம் திறந்துவிடப்பட்டு உள்ளது.

போன்பே ஆப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு பல வகையான வசதிகள் அணுக கிடைக்கிறது. அவைகளில்.. உங்கள் ஏடிஎம் கார்டு (ATM Card) அல்லது டெபிட் கார்டு (Debit Card) வழியாக அணுக கூடிய மிகவும் முக்கியமான ஒரு வசதியை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

அட்ரா சக்கை.. PhonePe ஆப்பில் இப்படி ஒரு வசதியா!

யுபிஐ பேமண்ட் ஆப் (UPI Payment App) ஆன போன்பே வழியாக "முக்கியமான விவரங்களை" பகிராமலேயே உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து தடையின்றி பணப்பரிமாற்றங்களை செய்ய முடியும். ஒருவேளை உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும் கூட, அந்த இரண்டாவது பேங்க் அக்கவுண்டையும் கூட போன்பே ஆப்பில் சேர்க்கலாம்.

அதாவது போன்பே ஆப்பில் மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை லிங்க் செய்யும் (Linking Multiple Bank Accounts) வசதி அணுக கிடைக்கிறது. இதை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் (நீங்கள் போன்பே ஆப்பில் சேர்க்க விரும்பும் வங்கியின்) ஏடிஎம் கார்டோ அல்லது டெபிட் கார்டோ தான்! குறிப்பிட்ட கார்டு ஆனது ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அட்ரா சக்கை.. PhonePe ஆப்பில் இப்படி ஒரு வசதியா!

மேலும் நீங்கள் 'ஆட்' செய்ய விரும்பும் வங்கி கணக்கோடு பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டு (SIM card registered with your Bank account) ஆனது, நீங்கள் போன்பே ஆப்பை இன்ஸ்டால் செய்துள்ள அதே மொபைலில் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்யவும். இப்படி இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட பேங்க் அக்கவுண்ட்டை போன்பே ஆப் உடன் சேர்க்க முடியும்.

போன்பே ஆப்பில் மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை ஆட் செய்வது எப்படி?
01. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள போன்பே ஆப்பை திறக்கவும்.
02. இப்போது ஸ்க்ரீனின் மேல் இடது மூலையில் உள்ள ப்ரொபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும்
03. பின்னர் மெனுவில் இருந்து ஆட் நியூ பேங்க் (Add New Bank) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

அட்ரா சக்கை.. PhonePe ஆப்பில் இப்படி ஒரு வசதியா!

04. இப்போது வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுக்கவும். (இந்த இடத்தில் போன்பே ஆப் ஆனது தானாகவே உங்கள் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை பெற்று, அதை உங்கள் ப்ரொபைல் உடன் இணைக்கும்.)
05. இப்போது செட் யுபிஐ பின் (Set UPI PIN) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் யுபிஐ பின்-ஐ செட் செய்யவும்

06. பின்னர் ஓனர்ஷிப்பை (Ownership) சரிபார்க்க உங்கள் கார்டு விவரங்களை உள்ளிடவும்.
07. இறுதியாக, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி-ஐ உள்ளிட்டு, நீங்கள் தொடங்கிய இந்த செயல்முறையை முடிக்க உங்கள் யுபிஐ பின்-ஐ செட் செய்யவும்; அவவ்ளவு தான்!

மேற்கண்ட எளிமையான படிகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் போன்பே ஆப்பில் பல வங்கி கணக்குகளை தடையின்றி இணைக்கலாம். போன்பே ஆப்பில் மட்டுமல்ல.. இரண்டு வங்கி கணக்குகள் உடனும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் ஒரே மாதிரியாக இருந்தால், கூகுள் பே ஆப்பிலும் கூட மல்டிபிள் பேங்க் அக்கவுண்ட்களை சேர்க்கலாம்.

இதை செய்ய உங்கள் போனில் உள்ள கூகுள் பே ஆப்பை திறக்கவும். பின்னர் ஸ்கீரினின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்யவும் இப்போது பேங்க் அக்கவுண்ட்டை கிளிக் செய்யவும்; பின்னர் ஆட் பேங்க் அக்கவுண்ட் என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

இப்போது கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் வங்கிக்கு சரிபார்ப்பு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்ப கூகுள் பேவிற்கு அனுமதி வழங்க வேண்டும். பின்னர் உங்கள் பேங்க் அக்கவுண்ட் தொடர்பாக கேட்கப்படும் விவரங்களை கொடுக்க, கூகுள் பே ஆப்பில் இன்னொரு பேங்க் அக்கவுண்ட்டை உங்களால் ஆட் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Take your Second ATM or Debit Card Add Another Bank Account in Your PhonePe App Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X