அதிர்ச்சி : 15 ஆண்டுகள் வசித்த வீட்டை விற்கும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா.!!
அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் அமைந்திருக்கும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லாவின் இல்லம் இந்திய மதிப்பில் ரூ.23,41,32,500க்கு விற்பனை வருவதாக எல்.ஏ டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 4,000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டில் மொத்தம் நான்கு படுக்கை அறைகள், மூன்று குளியலறைகளை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு விற்பனைக்கு வரும் நாதெல்லா வீட்டின் புகைப்படங்களை பாருங்கள்.

விலை
2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாதெல்லா இந்த வீட்டை சுமார் 1.38 மில்லியனுக்கு வாங்கினார்.

கட்டமைப்பு
இந்த வீடு 1963 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டு, இன்றைய நவீன வடிவமைப்புக்கு ஏற்றவாரு மாற்றப்பட்டுள்ளது.

பார்வை
வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஜன்னல்களில் இருந்து பார்த்தால் அழகிய வெளிப்புறங்கள் தெரியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சியாட்டில் ஸ்கைலைன்
இந்த வீட்டில் இருந்து பார்க்கும் போது சியாட்டில்ஸ்கைலைன், வாஷிங்டன் குளம் உள்ளிட்டவைகளை காண முடியும்.

காலம்
சுமார் 15 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விட்டு அதே பகுதியில் வேறு வீட்டிற்கு குடியேற நாதெல்லா முடிவு செய்திருக்கின்றார்.

மதிப்பு
தனது பழைய வீட்டை சுமார் $3.488க்கு விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

அறை
இந்த வீட்டில் உணவறை, வாழும் அறை சமையலறை என அனைத்தும் ரம்மியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சமையலறை
நாதெல்லாவின் சமையலறை மிகவும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை புகைப்படத்தில் பார்க்க முடிகின்றது.

வாழும் அறை
விருந்தினர்களை வரவேற்கும் வாழும் அறையானது சமையலறையில் பக்கத்தில் இருக்கும் படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

அலுவல்
இரண்டாவது தளத்தில் வாழும் அறையை பார்த்த படி அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அறை கட்டமைக்கப்பட்டுள்ளது.

காட்சி
அலுவல் அறையில் இருந்து வெளியில் பார்க்கும் போது அழகிய இயற்கையை ரசிக்க முடியும்.

படுக்கை அறை
இது தான் சத்ய நாதெல்லாவின் படுக்கை அறை, இங்கிருந்து உள்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கும் குளியளறை பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது.

விருந்தினர்
விருந்தினர்கள் தங்கும் அறைகளில் ஒன்று தான் இது.

இல்லம்
மொத்தமாக சத்ய நாதெல்லாவின் இந்த வீடு சுமார் 4000 சதுர அடியில் நான்கு படுக்கை அறை, 3 குளியலறை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications