"உண்மையாகவே உலக அதிசியம்"., அதுசரி இங்க எப்போ டெஸ்லாவை டெலிவரி செய்வீங்க- மஸ்க்கிற்கு பேடிஎம் நிறுவனர் கேள்வி!

|

உண்மையாகவே தாஜ்மஹால் உலக அதிசியம் தான் என எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்டுக்கு பேடிஎம் நிறுவனம் விஜய் சங்கர் ரீடுவிட் செய்திருக்கிறார். எலான் மஸ்க் டெஸ்லாவை இந்தியாவிற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் டுவிட் செய்துள்ளார்.

உண்மையாகவே தாஜ்மஹால் ஓர் உலக அதிசியம் தான்

டுவிட்டர் தளத்தில் ஹிஸ்டரி டிஃபைன்ட் என்ற பக்கத்தில் "ஆக்ராவில் உள்ள செங்கோட்டையின் முகப்பு கலை சிறப்பை வெளிப்படுத்தும் படியான புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது", இந்த புகைப்படத்துக்கு எலான் மஸ்க் ரிப்ளை செய்துள்ளார். அதில் இது அருமையாக இருக்கும் நான் 2007 ஆம் ஆண்டு இந்தியா வந்தேன் அப்போது தாஜ்மஹாலை பார்வையிட்டேன். உண்மையாகவே தாஜ்மஹால் ஓர் உலக அதிசியம் தான் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

மேயே மஸ்க் தாஜ்மஹால் குறித்து டுவிட்

தொடர்ந்து எலான் மஸ்க்கின் தாயாரும், பிரபல எழுத்தாளருமான மேயே மஸ்க் தாஜ்மஹால் குறித்து டுவிட் ஒன்றை செய்துள்ளார். மஸ்க்கின் பாட்டி தாஜ்மஹாலுக்கு சென்ற நிகழ்வாகும். அந்த டுவிட்டில் அவரது தாத்தா பாட்டி மற்றும் தாஜ் வருகை பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். 1954 ஆம் ஆண்டில், மஸ்கின் தாத்தா பாட்டி தென்னாப்பிரிக்காவிலிருந்து தாஜ்மஹாலுக்கு ஆஸ்திரேலியா செல்லும் வழியில் பறந்தனர். அப்போது தாஜ்மஹாலுக்கு சென்றிருக்கின்றனர். ரேடியோ மற்றும் ஜிபிஎஸ் இல்லாத காலக்கட்டத்தில் ஒற்றை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானத்தில் அவர்கள் பறந்து சென்றிருக்கின்றனர். இந்த பயணத்தை மேற்கொண்டவர் இவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது என மே மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கேள்வி

உண்மையாகவே தாஜ்மஹால் உலக அதிசியம் தான் என எலான் மஸ்க் டுவிட்டுக்கு பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ரீடுவிட் செய்திருக்கிறார். அதில் டெஸ்லாவை தாஜ்-ல் டெலிவரி செய்யச் சொல்லி இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டுக்கு பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அளித்த பதிலில்., இந்தியாவிற்கான FSD (Full Self Driving) அமைப்பது டெஸ்லாவுக்கு நம்பமுடியாத அளவிலான சவாலாக இருக்கும். மேலும் நாங்கள் கட்டுக்கடங்காத சாலையை பயன்படுத்துபவர்கள் என அறியப்படுகிறோம். தொடர்ந்து தாஜ்மஹாலில் டெஸ்லாவை டெலிவரி செய்ய எப்போது இங்கு வருவீர்கள் என டுவிட் செய்திருக்கிறார். இந்தியாவில் டெஸ்லாவை தொடங்கும்படி மறைமுகமாக எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா.

டுவிட்டரை வாங்கிய மஸ்க்

டுவிட்டரை வாங்கிய மஸ்க்

டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டது. எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டார். அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்தார்.

பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்ட மஸ்க்

பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்ட மஸ்க்

டுவிட்டரை வாங்க முயற்சிக்கும் போதே மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதம் செய்யப்படுகின்றன, புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும், இதன்மூலம் டுவிட்டர் எப்போதும் இல்லாததைவிட மிகவும் சிறந்ததாக இருக்கும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல் நிறுத்தப்பட்டு சிறந்ததாக்க விரும்புகிறேன் என டுவிட் செய்திருந்தார்.

சிறிய கட்டணம் வசூலிக்க திட்டம்

சிறிய கட்டணம் வசூலிக்க திட்டம்

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ள இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே எலான் மஸ்க், டுவிட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். டுவிட்டரை வாங்கிய மஸ்க், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் அதற்கு டுவிட்டர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TajMahal Truly Wonder of the World., thats ok when you coming here to deliver first tesla: Paytm Founder Reply to Elon musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X