Home
News

பெட்டியை தூக்குங்கடா.. புது TACTV HD செட் டாப் பாக்ஸ் விநியோகம் துவங்கியது.. தமிழக Cable TV-ன் புதிய அவதாரம்..

தமிழ்நாட்டில் மலிவு விலையில் கேபிள் டிவி சேவையை (Cable TV network) வழங்கி வரும் நிறுவனமாக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் HD குவாலிட்டி டிவி சேனல்களை வழங்கும் நோக்கத்தில் புதிய TACTV எச்டி செட் டாப் பாக்ஸ் (TACTV HD Set Top Box) கருவிகளை TACTV தற்போது விநியோகம் செய்ய துவங்கியுள்ளது. இதற்காக 50 லட்சம் புதிய HD செட் டாப் பாக்ஸ்களை தமிழக அரசு வாங்கி தயார்நிலையில் வைத்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த HD கேபிள் டிவி சேவை (HD cable TV service) தற்போது தமிழக மக்கள் வீட்டிற்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய துவங்கியுள்ளது. புதிய TACTV எச்டி செட் டாப் பாக்ஸ் (TACTV HD Set Top Box) உடன் தமிழக அரசின் எச்டி கேபிள் டிவி சேவை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

பெட்டியை தூக்குங்கடா.. புது TACTV HD செட் டாப் பாக்ஸ் விநியோகம்..

தமிழக அரசு Cable TV-ன் புதிய அவதாரம்.. புது TACTV HD செட் டாப் பாக்ஸ் விநியோகம் துவங்கியது:

தமிழ்நாட்டிற்குள் உள்ள வீடுகளில் இந்த புதிய HD செட் டாப் பாக்ஸ்களை கொண்டு சேர்க்கும் முயற்சியல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. TACTV சேவை தற்போது ஸ்டாண்டர்ட் குவாலிட்டியில் (SD quality) ரூ. 140 + GST என்ற மலிவான கட்டணத்துடன் பொதுமக்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இருப்பினும், பிரைவேட் கேபிள் டிவி நிறுவனங்கள் (private cable TV operators) உயர் தெளிவு திறன் கொண்ட கேபிள் டிவி சேவையை (HD cable TV service) தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன.

HD கேபிள் டிவி அனுபவத்தை அனுபவிக்க விரும்பும் தமிழக மக்கள் பெரும்பாலானோர் பிரைவேட் கேபிள் டிவி சேவையை (private cable tv service) அதிக பணம் கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதை சரி செய்ய, தமிழக அரசு விரைவில் HD கேபிள் டிவி சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் (Government cable tv operators) மற்றும் சந்தாதாரர்கள் கோரிக்கை வைத்தனர்.

புதிய TACTV HD செட் டாப் பாக்ஸ் (New TACTV HD Set Top Box):

இவர்களின் கோரிக்கைக்கு இணங்க, தமிழக முதல் அமைச்சரின் உத்தரவின் படி, 50 லட்சம் புதிய HD செட் டாப் பாக்ஸ் கருவிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கை (distribution of new TACTV HD Set Top Box started) துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 2 லட்சம் TACTV HD செட் டாப் பாக்ஸ் கருவிகளை விநியோகம் செய்யும் பணித் துவங்கியுள்ளது. புதிய செட் டாப் பாக்ஸ்களை வாங்க விரும்பும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- டெபாசிட் தொகை (deposit amount) செலுத்தி சாதனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை அதிக பணம் கொடுத்து பிரைவேட் கேபிள் டிவி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள், உங்கள் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டரிடம் (local cable tv operator) இருந்து புதிய எச்டி செட் டாப் பாக்ஸ் கருவிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறுமாறு தமிழக அரசு (Tamil Nadu Government) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேபோல, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களும் இந்த சேவையை மக்களிடம் சரியாக சென்றைடைய செய்ய வேண்டுமென்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய அரசு கேபிள் டிவி சேவையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்:

மற்றொரு முக்கிய அறிவிப்பாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் பதிவு செய்து, திடீரென எந்த செயல்பாடும் இல்லாமல், மறைந்திருக்கும் (Inactive Local Cable TV Operators) உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய TACTV HD Set Top Box கருவிகளை வீட்டுக்கு வீடு சென்று சேர்க்கும் பணியின் மூலம் அவர்களின் கணக்குகளை செயலாக்கம் செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த வாய்ப்பையும் பயன்படுத்தாத, செயல் இழந்து காணப்படும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு பதிலாக புதிய உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை அரசு நியமித்து, புதிய TACTV HD செட் டாப் பாக்ஸ்களை வீடு வீடு விநியோகம் செய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TACTV HD Set Top Box Service Launched With Rs 500 Deposit Amount New 50 Lakh Devices In Distribution
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X