Home
News

Jio, Airtel யூசர்களே.. இதை பண்ணா போதும்.. எல்லா T20 World Cup போட்டிகளையும் FREE-ஆ.. LIVE-ஆ பார்க்கலாம்!

நடந்து முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆனது சில மறக்க முடியாத நினைவுகளை வழங்கிய கையோடு.. இறுதியில் ஏமாற்றத்தையும் பரிசளித்தது. குறிப்பாக சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு! ஆனால் 2024 ஜூன் மாதம் அப்படி இருக்கப்போவதில்லை. நேற்று வரையிலாக நான் மும்பை அணி, நீ கொல்கத்தா அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் தான் கெத்து, ஈ சாலா கப் நம்தே என்று தனித்தனியாக பிரிந்துகிடந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளனர்.

டி20 கிரிக்கெட் உலக கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கான அட்டவணை: ஜூன் 18 வரை க்ரூப்-ஸ்டேஜ் போட்டிகள் நடக்க உள்ளன. அதனை தொடர்ந்து சூப்பர் 8 போட்டிகள் ஜூன் 25 வரை நடக்க உள்ளன. பின்னர் செமி-பைனல்கள் போட்டிகள் முடிந்து இறுதி ஆட்டம் ஜூன் 29 ஆம் தேதி நடக்கவுள்ளது. இப்படியாக இந்த 2024 ஜூன் மாதம் முழுவதுவும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கிறது.

எல்லா T20 World Cup போட்டிகளையும் FREE-ஆக பார்ப்பது எப்படி?

டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி? 2024 டி20 கிரிக்கெட் உலக கோப்பைக்கான அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்பும் முழு உரிமையையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கொண்டுள்ளது. ஒருவேளை நீங்கள் டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை மொபைல் போன் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பினால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disney Plus Hotstar) காணலாம்.

எந்தெந்த ஜியோ திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? ரூ.1198, ரூ.4498, ரூ.3178, ரூ.808, ரூ.598, ரூ.758, ரூ.388 போன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா கிடைக்கும். அதன் வழியாக டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

ஜியோவின் ரூ.388 திட்டமானது டெய்லி 2ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இது 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. இதே போல ரூ.598 திட்டமானதும் கூட டெய்லி 2ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. ஆனால் இது 1 ஆண்டுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது.

ரூ.808 மதிப்புள்ள ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது டெய்லி 2ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இதுவும் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. இதே போல ரூ.758 திட்டமானதும் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. ஆனால் இது டெய்லி 1.5ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.1198 திட்டத்தை பொறுத்தவரை, இது டெய்லி 2ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இதுவும் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. மிகவும் விலை அதிகமான ரூ.4498 திட்டமானது டெய்லி 2ஜிபி என்கிற டேட்டாவை மொத்தம் 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இது 1 ஆண்டுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது

எந்தெந்த ஏர்டெல் திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? ரூ.499, ரூ.839 மற்றும் ரூ.3359 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா கிடைக்கும். முதல் 2 திட்டங்கள் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. கடைசியாக உள்ள திட்டம் 1 ஆண்டுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
T20 World Cup 2024 Live Streaming Free Recharge This Jio Airtel Disney Plus Hotstar Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X