இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?

|

அமெரிக்காவில் உள்ள டி-மொபைல் (T-Mobile) தனது 5 ஜி விளையாட்டை இன்று மற்றொரு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது, உங்கள் பழைய மொபைல் போன்களை நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, நிறுவனம் வழங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. என்ன சொல்லறீங்க உண்மைதானா? என்று நீங்கள் கேட்டால், ஆம்! இது உண்மைதான். ஆனால் ஒரு சின்ன நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி வேண்டுமா?

இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி வேண்டுமா?

நீங்கள் நிறுவனத்திடம் கொடுக்கும் மொபைல் போன் வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. அதிகாரப்பூர்வ வலைத்தளம் நீங்கள் எந்த மொபைல் போனை கொடுத்தாலும் இந்த சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளது. நீங்கள் ஒரு ஃபிளிப் போனை கொடுத்தால் கூட இது செல்லுபடியாகும். இந்த டெல்கோவைப் பொறுத்தவரை, 60 மில்லியன் பயனர்கள் இன்னும் வரையறுக்கப்பட்ட தரவுத் திட்டங்களுடன் AT&T அல்லது வெரிசோன் ஸ்மார்ட்போனில் சிக்கித் தவிக்கின்றனர்.

5 ஜி தரவுத் திட்டத்திற்கு ஒரே விலையில் மேம்படுத்தலாம்

5 ஜி தரவுத் திட்டத்திற்கு ஒரே விலையில் மேம்படுத்தலாம்

பெரும்பாலான தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு அவர்கள் செலுத்தும் சராசரி விலையில் பெரும்பாலான பயனர்கள் 5 ஜி அணுகலைக் கூட பெறவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. டி-மொபைல் மூலம், பயனர்கள் வரம்பற்ற 5 ஜி தரவுத் திட்டத்திற்கு ஒரே விலையில் மேம்படுத்தலாம் அல்லது மற்ற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகச் செலவு செய்துகொள்ளலாம். இலவசமாக கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போனை பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!ரகம் ரகமா., தரம் தரமா: ஆறு மாடல் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: ரொம்ப மலிவு விலை முதல் டாப் எண்ட் வரை!

இலவசமாக வரவில்லை, ஆனால் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கிறது

இலவசமாக வரவில்லை, ஆனால் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கிறது

இந்த சலுகையை நீங்கள் நிறுவனம் கூறும்படி 24 மாத பில் கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். பிறகு சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போனை நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. இது விற்பனை வரியை மட்டுமே வசூலிக்கிறது என்பதையும் நினைவில் கொள்க. எதுவும் இலவசமாக வரவில்லை, ஆனால் ஒப்பந்தம் மிகவும் அருமையாக உள்ளது, ஏனெனில் நீங்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை, அது கிட்டத்தட்ட இலவசமாக உங்களுக்கு கிடைக்கிறது. மேலும், இந்த சலுகை புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

ஜியோ போல் மாறிவிட்ட டி-மொபைல்

ஜியோ போல் மாறிவிட்ட டி-மொபைல்

தற்போதுள்ள டி-மொபைல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர், இன்னும் வரையறுக்கப்பட்ட தரவுத் திட்டத்தில் இருக்கும் அனைத்து முன்னாள் ஸ்பிரிண்ட் வாடிக்கையாளர்களும் உட்பட, அனைவரும் வரம்பற்ற தரவுத் திட்டத்திற்கு முற்றிலும் இலவசமாக மேம்படுத்தப்படுவார்கள். அமெரிக்காவின் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களுக்கு டி-மொபைல் ரிலையன்ஸ் ஜியோ போல் மாறிவிட்டதாகத் தெரிகிறது. நிறுவனம் அதிக சந்தாதாரர்களைக் கவர்ந்திழுக்கும் சில தைரியமான சந்தைப்படுத்தல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ஜியோவின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்

ஜியோவின் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்

இதற்கிடையில், நிறுவனம் தனது முகப்பு இணையத்தையும் 30 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுடன் இணைத்துள்ளது. இது நிறுவனம் முழு நாட்டிலும் மிகப்பெரிய பிராட்பேண்ட் வழங்குநர்களில் ஒருவராக திகழ்கிறது. அமெரிக்காவில் ஜியோ போல் செயல்படும் டி-மொபைல் சலுகையை இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவும் நடைமுறைப்படுத்தினால் அருமையாக இருக்கும். நமது எதிர்பார்ப்பை ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் கொண்டு நிறைவு செய்யும் என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
T-Mobile is Offering Samsung Galaxy A32 5G for Free in US : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X