ரூ.449 மட்டும்தான்- உயர்ரக அம்சங்கள், நீடித்த ஆயுளுடன் சிஸ்கா எச்இ910 இயர்போன்கள் அறிமுகம்!

|

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை ரூ.449 என்ற விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன்கள் ஆனது சிறந்த அம்சங்களோடு நீடித்த ஆயுளோடு வருகிறது. சிஸ்கா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எச்இ910 இயர்போன்கள் குறித்து பார்க்கலாம். இந்த இயர்போன்களின் விலை ரூ.500-க்கும் குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களின் முழு விவரங்களை பார்க்கலாம்.

மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்கள்

மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்கள்

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஹெட்செட்கள் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.449 என கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்கா எச்இ910 இயர்போன்கள் ஆனது ஆறு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகின்றன. இது ஆற்றல் மிக்க ப்ளூ, லைவ்லி ரெட், ஃபேன்சி ரெட், வொண்டர்ஃபுல் வைட், கார்ஜியல் க்ரீன் மற்றும் டைனமிக் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது. அனைவருக்கும் வீட்டு அனுபவத்தில் இருந்து தடையற்ற வேலையை செயல்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிஸ்கா எச்910 இயர்போன்களின் அம்சங்கள்

சிஸ்கா எச்910 இயர்போன்களின் அம்சங்கள்

சிஸ்கா எச்910 இயர்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது லைட்வெயிட் மற்றும் ஆன்டி டாங்கிள் கேபிள் சிஸ்கா வண்ண விருப்பத்தோடு வருகிறது. எச் 910 மிகக் குறைவான எடையைக் கொண்டுள்ளன. இது ஆன்டி டாங்கிள் கேபிள் உடன் வரும் என கூறப்படுகிறது. எச்இ910 இயர்போன்களானது நாய்ஸ் ரத்து செய்யும் அம்சத்தோடு வருகிறது. இது அழைப்பில் பேசும்போது சுற்றுப்புற ஒலிகளை அகற்ற அனுமதிக்கிறது.

டைனமிக் ஸ்பீக்கர் ஆதரவு

டைனமிக் ஸ்பீக்கர் ஆதரவு

டைனமிக் ஸ்பீக்கர் எச்இ910 உள்ளமைக்கப்பட்ட 10 மிமீ டைனமிக் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது சக்தி வாய்்நத ஆடியோ கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. அதேபோல் இந்த சாதனம் எச்டி ஒலி ஆதரவையும் வழங்குகிறது.

மல்டி ஃபங்க்ஷன் பட்டன்கள்

மல்டி ஃபங்க்ஷன் பட்டன்கள்

மல்டி ஃபங்க்ஷன் பட்டன்கள் அணுகலும் இதில் இருக்கிறது. இந்த பட்டன்களின் அணுகலானது அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், இசையை இயக்கவும், இடை நிறுத்தம் செய்யவும், நிறத்தம் செய்யவும் புதுமையான வால்யூம் கன்ட்ரோலர் ஆதரவு வருகிறது. இது ஒலியை ஆதரிக்கவும், குறைக்கவும் அனுமதிக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் சிஸ்கா எச்இ910 இயர்போன்களை உள்நாட்டில் தயாரித்துள்ளது.

வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவு

வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவு

வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவுகளோடு வருகிறது. இது அனைத்து வகையான காது அளவுகளுக்கும் பொருந்தக் கூடியவையாக இருக்கும் என சிஸ்கா தெரிவித்துள்ளது. இது மூன்று வகைகளில் கிடைக்கிறது. சிறிய, மீடியம் மற்றும் பெரிய அளவுகளில் வருகிறது. நீண்டகால உழைப்பு ஆதரவோடு வருகிறது.

தடிமனான வயர்கள் ஆதரவு

தடிமனான வயர்கள் ஆதரவு

இயர்போன்களில் வயர் ஆனது தடிமனான வகைகளில் வருகிறது. இது அதிக நீடித்த உழைப்பு மற்றும் உயர்தர ஆதரவோடு வருகிறது. எச்இ910 5000+ வரை முறை இழுத்து சோதனை செய்வதன் மூலம் இது நீடித்த தொடர்ந்த ஆயுளை வழங்கி இருக்கிறது. இது நீடித்த வலிமையை வழங்குகிறது.

சிஸ்கா நிறுவனம் ஆனது Syska PDQC01-36W மற்றும் Syska PDQC02-42W சார்ஜிங் அடாப்டர்களை அறிமுகப்படுத்தியது. சிஸ்கா அடாப்டர்கள் முன்னணி சில்லறை விற்பனை நிலையஙகளில் கிடைக்கின்றன. PDQC01-36W அடாப்டரின் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.2499 ஆக இருக்கிறது. அதேபோல் PDQC02-42W அடாப்டர் ஆனது ரூ.2999 என இருக்கிறது. இதன் இரண்டு தயாரிப்புகளும் இரண்டு வண்ணங்களில் வருகிறது. இது விஸ்டா ஒயிட் மற்றும் ஜேட் பிளாக் என வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. சிஸ்கா எச்இ910 இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றியுள்ள அனைத்து ஒலிகளையும் அகற்ற நாய்ஸ் ரத்து அம்சத்தை கொண்டு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Syska Launched HE910 Earphones With Multifunction Button, Different Sizes and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X