ப்பா சூப்பர்ல.. ஏழைகளுக்கு ஏற்ற குட்டி AC-யா இது? உலகின் முதல் வால் மவுண்ட் ஏர் கூலர்.. விறுவிறு விற்பனையில்..
இந்தியாவில் முதல் முறையாக வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனம் அறிமுகமாகி, விற்பனையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு ஏற்ற குட்டி ஏசி போன்ற (Mini AC) மாடலாக இந்த சாதனம் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. கோடை காலம் துவங்கியதில் இருந்து மக்கள் வெப்பத்தினால் வறண்டு சுருண்டு வாடி வருகின்றனர். இதனால், சந்தையில் ஏர் கூலர் (Air cooler), ஏசி (AC), கூலிங் ஃபேன் (Cooling Fan) போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும், எல்லோராலும் AC வாங்க முடிவதில்லை, அதனால், சிம்பொனி நிறுவனம் இந்த மினி ஏசி போன்ற மாடலை கொண்டுவந்துள்ளது.
வருடங்கள் கடக்க - கடக்க வெப்பத்தின் தாக்கம் மக்களை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக செயற்கையாக குளிர்ந்த காற்றை வழங்கும் சாதனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால், ஸம்மர் வந்துவிட்டாலே, கூலிங் ஃபேன் (cooling fan), டவர் ஃபேன் (tower fan), மிஸ்ட் ஃபேன் (mist fan), ஏர் கூலர் (air cooler) மற்றும் ஏசி (AC) போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துவிடுகிறது.

ப்பா சூப்பர்ல.. ஏழைகளுக்கு ஏற்ற குட்டி AC-யா இது? உலகின் முதல் வால் மவுண்ட் Air Cooler:
இந்த சாதனங்களில் சில சாதனங்களை வாங்க பல ஆயிரங்கள் தேவைப்படுகிறது. எல்லோராலும் அத்தகைய பெருந்தொகையை வழங்க முடிவதில்லை. இதனால், பலர் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களை கருத்தில் கொண்டு, சிம்பொனி நிறுவனம் ஏழைகளுக்கு ஏற்ற மினி ஏசி போன்ற சாதனமாக வெளிவந்துள்ளது தான் இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் (Wall Mount Air-cooler) சாதனம்.
இந்த சாதனத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இது பார்ப்பதற்கு ஏசி போல காட்சியளிக்கிறது. ஆனால், இது AC இல்லை.. சுவரில் மாட்டப்படும் ஒரு ஏர் கூலர் சாதனமாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆம் மக்களே, பொதுவாக ஏர் கூலர் என்றவுடன் உங்கள் கண்களுக்குள் ஒரு பெரிய சதுர டப்பா போன்ற வடிவம், உங்கள் ஹால் அல்லது உங்கள் படுக்கை அறையில் இருப்பது போன்ற பின்பதை உங்கள் மனம் காட்சியளிக்கலாம்.
ஆனால், இது பாரம்பரியமான ஏர் கூலர் மாடலை போன்றதல்ல, இது ஸ்ப்ளிட் ஏசி (split AC) மாடல் போல சுவரில் மாட்டப்படும் ஒரு புது வகையான ஏர் கூலர் சாதனமாகும். குறைந்த விலையில் ஏசி (AC) வாங்க நினைத்து, ஏசி விலை கட்டுப்படியாகாத மக்களுக்கு, சிறந்த பட்ஜெட் தேர்வாக இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் (Air Cooler) சாதனம் இப்போது வாங்க கிடைக்கிறது. இந்த ஏர் கூலர் சாதனம், இதுவரை யாரும் பார்த்திடாத புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது.
சிம்பொனி கிளவுட் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட வால் மவுண்ட் ஏர் கூலர் (Symphony Cloud 15L Wall Mounting Air Cooler):
இந்த புதிய வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனத்தை, மிகவும் பிரபலமான ஏர் கூலர் பிராண்ட் ஆன சிம்பொனி (Symphony) நிறுவனம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதை Symphony நிறுவனம், சிம்பொனி கிளவுட் (Symphony Cloud) என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது. இந்த சிம்பொனி கிளவுட் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட வால் மவுண்ட் ஏர் கூலர் (Symphony Cloud 15L Wall Mounting Air Cooler) சாதனமாகும்.
இது 57 கியூபிக் மீட்டர் (57cubic meters) அளவு கொண்ட அறையை குளுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுவற்றில் ஏசி போல மாட்ட கிடைக்கும் உலகின் முதல் வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனமே (World's first wall mount air cooler device) இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் விற்பனை செய்யப்படும் சாதாரண ஏர் கூலர்கள் போல, இதில் வாட்டர் டேங்க் (water tank) இன்பில்ட்டாக வருவதில்லை.
அதற்கு மாறாக, சிம்பொனி கிளவுட் வால் மவுண்ட் ஏர் கூலர் எக்ஸ்டர்னல் வாட்டர் டேங்க் (external water tank) அம்சத்துடன் வருகிறது. அதாவது, உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பக்கெட்டில் (bucket) தண்ணீர் ஊற்றி வைத்து, இந்த சாதனத்துடன் வழங்கப்படும் டியூபை அதனுள் வைத்தால் மட்டும் போதும். பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை இந்த டியூப் (Tube) உறுஞ்சி, ஏர் கூலருக்கு வழங்கி, சில் காற்றை அறைமுழுக்க வழங்கி, உங்கள் அறையை குளிர்ச்சியாக மாற்றுகிறது.
இந்த தனித்துவமான ஏர் கூலர் விலை என்ன?
இந்த ஏர் கூலர் சாதனத்திற்காக நீங்கள் பயன்படுத்தும் நீரை, சாதனம் மறுசுழற்சி செய்கிறது என்பதனால், தண்ணீரும் அதிகமாக வீணாவதில்லை. உங்கள் அறையின் ஜன்னல் மற்றும் கதுவுகளை திறந்து வைக்கும் பொழுது கூடுதல் சில் காற்றை உணர முடியும் என்கிறது சிம்பொனி நிறுவனம். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டில் உள்ள அணைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து கிராஸ் வென்டிலேஷன் முறையை பயன்படுத்த சிம்பொனி நிறுவனம் அறிவுரை வழங்குகிறது.
இப்படி செய்யும் பொழுது, வீடு விரைவாக குளிர்ச்சி அடையும். அந்த நேரத்தில் ஏர்கூலரை பயன்படுத்தினால், உங்கள் அறையின் வெப்பம் முழுமையாக குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இது ஏசியை விட குறைந்தளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏசி போன்ற குளிர்ச்சியை வழங்கவில்லை என்றாலும், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பித்து, உங்கள் வீட்டை குளிர்ந்த நிலையில் வைக்க உதவுகிறது.
அதிக பணம் செலவு செய்து ஏசி வாங்க முடியாதவர்கள், இந்த வால் மவுண்ட் ஏர் கூலர் சாதனத்தை குறைந்த விலையில் வாங்கலாம். ஏசி உடன் ஒப்பிடுகையில் இதன் விலை மிகவும் குறைவாக இருப்பதினால், இதன் விற்பனை இப்போது அதிகரித்துள்ளது. இந்த Symphony Cloud சாதனம் இப்போது ரிமோட் கண்ட்ரோலருடன் (remote controller) வெறும் ரூ.12,000 என்ற சலுகை விலையுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.14,000 ஆகும். குறைந்த எண்ணிக்கயிலான ஸ்டாக் மட்டுமே இருப்பதினால், முந்திக்கொள்வோருக்கு பயன்.


Click it and Unblock the Notifications








