Home
News

இப்படியொரு ரோபோ தான் தேவை: மீட்பு, விநியோம் போன்ற பல பணிகளை செய்யும் ரோபோ அறிமுகம்.!

தற்போது உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது தான் உண்மை.

 அடுத்த

மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டம் நம்மை முன்னோக்கி அழைத்து செல்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் 5ஜி நம்மை பல கட்டம் முன்னோக்கி எடுத்து செல்ல இருக்கிறது. மறுபுறம் தொழில்நுட்பங்களில் ரோபோக்கள் பங்களிப்பு வளர்ந்து கொண்டே வருகிறது.

 சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோக

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட அதிநவீன ரோபோவை
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரோபோ குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது மனிதர்களைப் போலவே இரு

அதாவது மனிதர்களைப் போலவே இரு கால்களிலும் இயங்கக் கூடிய வகையிலும், பின்பு சட்டென நான்கு கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஊர்ந்து செல்லும் வகையில் இந்த புதுவகை ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடிய வகையில் இந்த அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் இந்த அதிநவீன ரோபோ 100 கிலோ வரை எடையை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல்
தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனுக்கு தேவையான பணிகளை

குறிப்பாக மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான்.

 பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள்,

இப்போது பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் கூட ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலங்களில் தற்போதைய தொழில்நுட்பங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற

அதேபோல் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனத்தில் எலான்மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுவருகிறது இந்த டெஸ்லா நிறுவனம். டெஸ்லா நிறுவனம் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போலவே ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பின்புடெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்றுஎலான் மஸ்க் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Swiss researchers have introduced a robot that can perform various tasks such as rescue and distribution: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X