டெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது?
ஸ்விகி முதற்கட்ட விநியோகத்தை பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது எந்தெந்த இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது, இதில் எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

இந்தியாவில் 4,421 கொரோனா வைரஸ்
இந்தியாவில் 4,421 கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 115 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

80-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோகம்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரங்கு உத்தரவினால் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில் மக்களுக்கு உதவும்படியான இந்தியா முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகை பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளதாக சொமேட்டோ அறிவித்துள்ளது.

சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு
சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பு மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப் நீட்டிப்பானது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளில் அடுத்த 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதமக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதமக்கள் வீட்டுக்குள்ளேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்விகி மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் விநியோகத்தை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் இந்த விற்பனை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விகி தன் செயல்பாட்டை மறு பெயருடன் தொடங்கியுள்ளது
கொரோனா பரவல் காரணத்தால் பொதுமக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்விகி தன் செயல்பாட்டை மறு பெயருடன் தொடங்கியுள்ளது. ஸ்விகி கோ இன்ஸ்டன்ட் பிக் அப் மற்றும் டிராப் சேவையை "ஸ்விகி ஜீனி" என்ற பெயருடன் தொடங்கியுள்ளது.

முதலில் பெங்களூரில் மட்டுமே தொடங்கியது
இந்த சேவையானது முதலில் பெங்களூரில் மட்டுமே தொடங்கியது. ஆனால் அதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு வருகிற நாட்களில் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் தங்களது சேவையை செயல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

ஸ்விகி ஒரு பிரத்யேக மளிகைப் பிரிவைக் கொண்டுள்ளது
இதில் ஸ்விகி ஒரு பிரத்யேக மளிகைப் பிரிவைக் கொண்டுள்ளது, அதில் ஒரு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட கடைகளை தேர்ந்தெடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஸ்விகி ஜீனி என்ற பெயரில் செயல்பாடு
ஸ்விகி ஜீனி என்ற பெயரின் மூலம் இரண்டு மணி நேரத்தில் அத்தியாவசிய ஆர்டர்களை வழங்கும் என்று ஸ்விகி தெரிவித்துள்ளது. மேலும், அருகிலுள்ள கடைகளின் மூலம் பழங்கள் மற்றும் காய்கறி உள்ளிட்டவைகளையும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications