ஸ்விக்கி UPI.. இனி பேமெண்ட் மிஸ்ஸே ஆகாது.. ஃபெய்லியரும் ஆகாது.. கூகுள் பே, போன்பே-ல இனி கூட்டம் குறைஞ்சுடும்..
ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் இப்போது தனக்கு சொந்தமான யுபிஐ (UPI) என்ற யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடியம் (Paytm) போன்ற டிஜிட்டல் பேமெண்ட் கட்டண சேவையை நாம் பயன்படுத்துவது போல இனி ஸ்விக்கி தளத்தில் நிறுவனத்தின் சொந்த பேமெண்ட் சேவையை மக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இதன் மூலம் இனி பேமெண்ட் ஃபெய்லியர் ஆகவே ஆகாது என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.
ஸ்விக்கி தளத்தில் இருந்து, கூகுள் பே, போன்பே போன்ற வேறொரு தளத்திற்கு சென்று பேமெண்ட் செய்வது, அதிகப்படியாக பேமெண்ட் தோல்வியை உருவாக்குகிறது. இந்த சிக்கலை கருத்தில் கொண்டு, ஸ்விக்கி நிறுவனம் இப்போது அதன் சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மோடோ போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அதன் சொந்த யுபிஐ பேமெண்ட் சேவைகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விக்கி UPI.. இனி பேமெண்ட் மிஸ்ஸே ஆகாது.. ஃபெய்லியரும் ஆகாது:
இந்த சேவையை தனது சொந்த தளத்தில் கொண்டு வர ஸ்விக்கி நிறுவனத்திற்கு இப்போது தான் நேரம் கிடைத்துள்ளது. ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் தளமான Swiggy இனி மூன்றாம் தரப்பு UPI ஆப்ஸ்களை சார்ந்திருக்காது என்று அறிவித்துள்ளது. ஸ்விக்கி பயனர்கள் பணம் செலுத்துவதில் ஏற்படும் தோல்விகளைக் குறைக்கவும் மற்றும் செக் அவுட் அனுபவத்தை எளிதாக்கவும், அதன் சொந்த UPI (Unified Payments Interface) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நினைவுகூர, கடந்த ஆண்டு இதே சேவையை வழங்க மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குனர் (TPAP) உரிமத்திற்கு ஸ்மோடோ (Zomato) விண்ணப்பித்து சேவையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஸ்விக்கி அப்படி செய்யாமல், யெஸ் பேங்க் (Yes Bank) மற்றும் ஜஸ்பேயுடன் (Juspay) இணைந்து புதிய யுபிஐ ப்ளக்கின் (UPI-Plugin) சேவையின் மூலம் புதிய ஆப்ஸ் பேமெண்ட் சேவை தொடங்கியுள்ளது.
ஸ்விக்கி (Siggy) நிறுவனம் தற்போது இதை க்ளோஸ்டு யூஸர் குரூப்பில் (CUG) அதன் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த ஸ்விக்கி யுபிஐ சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதே ஒரே நேரத்தில் வெளியிடப்படாமல், நிறுவனம் படிப்படியாக ஒவ்வொரு பகுதியில் உள்ள பயனர்களுக்காக திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஸ்விக்கி UPI எப்போது பயனர்களுக்கு கிடைக்கும்?
ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களை வைத்து, கடந்த ஒரு மாதமாக இந்த புதிய சொந்த யுபிஐ சேவையை பரிசோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அதன் அனைத்து பயனர்களுக்கும் இந்த சேவையை வெளியிடும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன் மூலம் இனி ஸ்விக்கி பயனர்களின் கட்டணம் மிஸ்ஸே ஆகாது என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், பயனர்கள் இனி கட்டணத்தை செலுத்த ஸ்விக்கி தளத்தில் இருந்து, கூகுள் பே, போன்பே அல்லது பேட்டியம் போன்ற மற்ற ஆப்ஸ்களை திறந்து இடம் மாறவேண்டிய கூடுதல் வேலையும் இருக்காது என்று ஸ்விக்கி அறிவித்துள்ளது. ஸ்விக்கி பயனர்களின் அனுபவத்தை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்விக்கி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








