கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஸ்விக்கி எடுத்த முன்னெச்சரிக்கை.! இதுதான்.!

|

கொரொனா வைரல் பாதிப்பால் சீனாவில் மேலும் 11பேர் உயிரழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3,169-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ்
ஆனது தற்போது உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

 அதிகரித்த வண்ணமே உள்ளது

அதிகரித்த வண்ணமே உள்ளது

இந்த வைரஸ் இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவில் கொரொனா வைரஸ் பரவுவது ஒரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இருந்தபோதிலும், வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

வைரஸ் தாக்குதல்

வைரஸ் தாக்குதல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது, பின்பு ஒரு லட்சத்து 26ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு, தீவரி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பூமியைத் தாக்கிய கிரகத்தின் ஒரு பெரிய துண்டு சந்திரனுக்குள் புதைக்கப்பட்டுள்ளதா?விஞ்ஞானிகள் விளக்கம்பூமியைத் தாக்கிய கிரகத்தின் ஒரு பெரிய துண்டு சந்திரனுக்குள் புதைக்கப்பட்டுள்ளதா?விஞ்ஞானிகள் விளக்கம்

 ஆன்லைன் வழியாக ஆர்டர்

ஆன்லைன் வழியாக ஆர்டர்

இந்நிலையில் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் வழியாக கொரோனா பரவுமா? என்ற இந்த கேள்விக்குபதிலளிக்கும் வண்ணம், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு ஆர்டரிங் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம்,கொரோனா வைரஸை கையாள்வதற்கு சில நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு

கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அது பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும் சில செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம், எங்கள் வாடிக்கையாளர்கள்,ஊழியர்கள் விநியோக கூட்டாளர்கள் மற்றும் உணவக கூட்டாளர்களின் பாhதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது, இப்போது முன்பை விட அதிக முன்னுரிமையை வழங்குகிறோம் என்று ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

விரிவாகப் பார்ப்போம்

அதன்படி பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிக்க ஸ்விக்கி நிறுவனம் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கைகளை கழுவவேண்டும்

கைகளை கழுவவேண்டும்

எங்கள் நிறுவனத்தின் டெலிவரி பாட்னர்களுக்கு தொடர்ந்து சுவாசம் சார்ந்த சுகாதாரம், அது சார்ந்த சரியான முறை மற்றும் எத்தனை முறை, எப்போதெல்லாம் கைகளை கழுவவேண்டும் மற்றும் வைரஸ் தாக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி போன்ற பயற்சிகளை சிறந்த நடைமுறைகளில் தொடந்து பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

,மருத்துவ நிபுணரை அணுகும்படியும் கேட்கப்படுகிறார்

,மருத்துவ நிபுணரை அணுகும்படியும் கேட்கப்படுகிறார்

எங்களது டெலிவரி பார்டனர் குறிப்பிட்ட வைரஸ் உடன் தொடர்புடைய சில அறிகுறைகளை கண்டால், உடனடியாக எங்களை அணுகும்படியும், மருத்துவ நிபுணரை அணுகும்படியும் கேட்கப்படுகிறார். மேலும் எங்கள் நிறுவனத்தின் மெடிக்கல் பாட்னர்கள் மூலம் டெலிவரி பார்டனர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்.!6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்.!

நிதி ரீதியாக உதவும் கடமைப்பட்டுள்ளோம்

நிதி ரீதியாக உதவும் கடமைப்பட்டுள்ளோம்

ஒருவேளை கொரோனா வைரஸ் சார்ந்த அறிகுறி இருந்தால், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு தங்களைஅவர்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் நாங்கள் எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும் நிதி ரீதியாக உதவும் கடமைப்பட்டுள்ளோம்.

கூடுதல் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது

கூடுதல் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது

ஏற்கனவே உணவுப் பொருட்களை கையாளும் போதும்,பேக்கேஜிங் செய்யும் போது சிறந்த சுகாதர நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என எங்கள் பார்ட்னர்கள் அறிந்திருக்கிறார்கள், தற்சமயம் அது கூடுதல் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.

ஆன்லைன் கட்டணம் செலுத்தியிருந்தால்

ஆன்லைன் கட்டணம் செலுத்தியிருந்தால்

ஒருவேளை உணவை ஆர்டர் செய்பவர்கள் உடல்நிலை சரியில்லமால் இருந்தால் அல்லது அவர்கள் விரும்பினால் அவர்களுகக்கான உணவை வீட்டு வாசலிலேயே(ஆன்லைன் கட்டணம் செலுத்தியிருந்தால்) விட்டுவிடுமாறு டெலிவரி
பார்ட்னரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Swiggy Taken It's Own Precaution Steps To Prevent Spreading Of Coronavirus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X