45 நிமிடத்தில் டெலிவரி: ஸ்விக்கி அதிரடி அறிவிப்பு., கலக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

|

ஸ்விக்கி புதிய இன்ஸ்டாமார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருட்களை 45 நிமிடத்துக்குள் டெலிவரி செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் டெலிவரி சேவை

ஆன்லைன் டெலிவரி சேவை

பொதுமக்களிடம் ஆன்லைன் டெலிவரி சேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்கள் விநியோகத்தை மேம்படுத்தும் விதமாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாமார்ட் சேவை

இன்ஸ்டாமார்ட் சேவை

இன்ஸ்டாமார்ட் சேவையானது ஸ்விக்கியின் விரைவான டெலிவரி சேவையாகும். இந்த சேவை மூலம் 30-45 நிமிடங்களுக்குள் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இந்த சேவையானது காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு வகைகள் டெலிவரி

பல்வேறு வகைகள் டெலிவரி

இன்ஸ்டாமார்ட் சேவையில் உடனடி உணவு பண்டங்கள், ஐஸ்கிரீம்கள், பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு வகைகள் டெலிவரிக்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

45 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்கள்

45 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்கள்

45 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்களை வழங்கும் வகையிலான இன்ஸடாமார்ட் சேவை குருகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் சேவை முதல்கட்டமாக குருகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மளிகை விநியோகம்

மளிகை விநியோகம்

மளிகை விநியோகம் உடனடி மேற்கொள்வதன் மூலம் இணையற்ற வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஸ்விக்கியின் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு எந்தவகையில் மகிழ்சச்சியளிக்கிறது என்பது குறித்த முதற்கட்ட சோதனை நடத்தப்படுகிறது.

2000 ஆண்டுக்கு முன்பே இதை செய்த தமிழர்கள்: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் சிக்கிய நற்செய்தி.!2000 ஆண்டுக்கு முன்பே இதை செய்த தமிழர்கள்: கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் சிக்கிய நற்செய்தி.!

மெய்நிகர் கடைகள் ஆதரவு

மெய்நிகர் கடைகள் ஆதரவு

ஸ்விக்கி இந்த சேவை மெய்நிகர் கடைகள் ஆதரவோடு கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்விக்கியின் இந்த சேவையில் 2500-க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த சேவை அடுத்த சில நாட்களில் பெங்களூரில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பிளிப்கார்ட், அமேசான், ஜியோமார்ட்

பிளிப்கார்ட், அமேசான், ஜியோமார்ட்

ஸ்விக்கியின் இந்த அறிவிப்பு அதன் போட்டி நிறுவனங்களாக இருக்கும் பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட், அமேசான், ஜியோமார்ட் உள்ளிட்டவைகளுக்கு பேரிடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 90 நிமிடங்களில் டெலிவரி என பிளிப்கார்ட் அறிவித்திருந்தது.

வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்து

வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்து

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்க வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ, வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியது.

ஜியோமார்ட் தளம்

ஜியோமார்ட் தளம்

ஜியோமார்ட் தளத்தில் பல பொருள்களும் எம் ஆர் பி விலையிலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் விற்பனை செய்வதாக அறிவித்தது. இந்த ஆன்லைன் மளிகை விற்பனையை ஜியோ மார்ட் சில்லரை விற்பனை கடைகள் மூலம் தொடங்கியது.

45 நிமிட டெலிவரி சேவை

45 நிமிட டெலிவரி சேவை

உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தளங்கள் தொடங்குவதிலும் வாடிக்கையாளர்களிடம் பரீட்சியம் ஆவதிலும் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்விக்கி 45 நிமிட டெலிவரி சேவை எந்தளவு நடைமுறையில் வெற்றிபெரும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Swiggy Launches Instamart Service to Delivery Grocery's With in 45 Mins

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X