ஸ்விகியிடம் இருந்து இப்படி ஒரு சேவையா? புதிய ஸ்விகி கோ சேவை அறிமுகம்!

|

ஸ்விகே நிறுவனம் புதிதாக ஸ்விகி கோ (Swiggy Go) என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின் படி பயனர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான சிறு சிறு வேலைகளையும் ஸ்விகி கோ மூலம் செய்து கொள்ளலாம்.

டன்சோவிற்கு போட்டியாக ஸ்விகி கோ

டன்சோவிற்கு போட்டியாக ஸ்விகி கோ

இதற்கு முன்பே டன்சோ (Dunzo) என்ற நிறுவனம், இந்த 'பிக்கப் அண்ட் டிராப்' சேவையை இந்தியாவில் செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விகி நிறுவனமும், இந்த பிக்கப் அண்ட் டிராப் சேவையை ஸ்விகி கோ என்ற பெயரில் துவங்கி உள்ளது.

300 நகரங்களில் ஸ்விகி கோ சேவை

300 நகரங்களில் ஸ்விகி கோ சேவை

துவக்கக் கட்டமாக ஸ்விகி கோ சேவை, முதலில் பெங்களூர் நகரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 300 நகரங்களில் ஸ்விகி கோ சேவை 2020 ஆம் ஆண்டிற்குள் தொடங்கப்படும் என்றும் ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா?ஜியோஃபைபர்: இலவச டிவி, இலவச டேட்டா, செட் டாப் பாக்ஸ், அடேங்கப்பா இவளோ சலுகையா?

வீட்டுச் சாவியை கூட டோர் டெலிவரி செய்யலாம்

வீட்டுச் சாவியை கூட டோர் டெலிவரி செய்யலாம்

இந்த ஸ்விகி கோ சேவையைப் பயன்படுத்தி மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாட்டை பார்சல் அனுப்பலாம் அல்லது உங்களுக்குத் தேவையான மருந்துக் கடையிலிருந்து மருந்து வாங்கி வரச் சொல்லலாம் அல்லது உங்கள் நண்பரிடம் இருக்கும் உங்கள் வீட்டுச் சாவியை வாங்கி வரச்சொல்லிக் கூட ஸ்விகி கோ சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!தடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

பிக்கப் அண்ட் ட்ராப் சேவை

பிக்கப் அண்ட் ட்ராப் சேவை

உங்களுடைய பார்சல் பொருட்கள் அல்லது லாண்டரிக்கு துணி போட வேண்டும் என்றாலும் அல்லதுஉங்களுக்கு தேவையான எந்த ஒரு டோர் டெலிவரி சேவையாக இருந்தாலும், இந்த புதிய ஸ்விகி கோ சேவையின் மூலம் அதை நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளலாம். டன்சோ நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்விகி பிக்கப் அண்ட் ட்ராப் சேவையில் களமிறங்கியுள்ளது எதிர்பாராத ஒரு நிகழ்வாகவே உள்ளது.

ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.!ஜியோ ஃபைபர் அறிமுகப்படுத்தியதும், திடீரென 1000ஜிபி இலவச டேட்டாவை அறிவித்த ஏர்டெல்.!

ஸ்விகி கோ சேவை

ஸ்விகி கோ சேவை

இதே போல் ஸ்விகி வடிக்கையளர்கள், ஸ்விகி கோ சேவையை பயன்படுத்தி ஸ்விகி ஸ்டோரில் இருந்தும் அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான், மருந்து மற்றும் பல பொருட்களை எளிதாக இனிமேல் டோர் டெலிவரி செய்துகொள்ளலாம். பிக்கப் ட்ராப் சேவைக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த புதிய சேவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Swiggy Launched New Swiggy Go-Pickup And Drop Service In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X