Swiggy 150 நகரங்களில் மளிகை விநியோக சேவையைத் துவங்கவுள்ளதா? உண்மை என்ன?

|

பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஸ்விகி நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மளிகை விநியோக சேவையான ஸ்விகி ஸ்டோர் சேவையைப் பெங்களூரு மற்றும் குருகிராமில் துவங்கியது. வீட்டிற்குத் தேவைப்படும் அனைத்துவிதமான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நோக்கத்தில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்விகி ஸ்டோர்

ஸ்விகி ஸ்டோர்

இந்த ஸ்விகி ஸ்டோர் சேவை முதற்கட்டமாக இரண்டு நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொருட்களுக்குச் சிறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆபத்தான நேரத்திலும் வெளியில் வரவேண்டிய கட்டாயம் இருப்பதினால் ஸ்விகி தனது சேவையை முக்கியமான 150 நகரங்களுக்கு விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

150 நகரங்களில் மளிகை விநியோகம்

150 நகரங்களில் மளிகை விநியோகம்

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த அறிக்கை இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்விகி நிறுவனம் 500 நகரங்களில் உள்ள தனது 2.5 லட்சம் விநியோக நபர்களைக் கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தயாராக உள்ளது என்று தற்பொழுது அறிவித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் இந்த சேவையைத் துவங்கத் தயார் என்று அறிவித்துள்ளது.

டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.!டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.!

CEO விவேக் சுந்தர் கூறியதாவது

CEO விவேக் சுந்தர் கூறியதாவது

இதுகுறித்து ஸ்விகி நிறுவனத்தின் CEO விவேக் சுந்தர் கூறியதாவது, பல நகரங்களில் இந்த சேவையைத் திறக்க இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களாகும் என்றும், விநியோகச் சங்கிலி இடையூறு இல்லாமல் இருக்க மளிகைக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், விநியோக நபர்கள் துன்புறுத்தப்படாமல் செயல்பட காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

10 மடங்கு அதிகரித்துள்ள ரத்து

10 மடங்கு அதிகரித்துள்ள ரத்து

ஊரடங்கைத் தொடர்ந்து பல இடங்களில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எண்களின் ரத்து விகிதம் 10 மடங்கு அதிகரித்துள்ளது, குறிப்பாக எங்களுடைய டெலிவரி பாய்ஸ் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு போன்ற நகரங்களில் கூட எங்கள் டெலிவரி பாய்ஸ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய OnePlus Pay பற்றி உங்களுக்கு தெரியுமா?

கவனத்துடன் பொருட்களை டெலிவரி

கவனத்துடன் பொருட்களை டெலிவரி

மாநில மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச போன்ற இடங்களில் ஆன்லைன் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நிறுவனமும் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று ஸ்விகி கூறியுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருதி கவனத்துடன் பொருட்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Swiggy Is Ready To Launch It's Swiggy Store Service In 150 Cities In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X