Home
News

10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இந்தியாவில் புதிய சேவையை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்..

இந்தியாவில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குயிக் காமர்ஸ் செயலிகள் மூலம் வெறும் 10 நிமிடங்களில் ஆர்டர் செய்து பெற்றுவரும் வசதி ஏற்கனவே பிரபலமாக உள்ளது. அதேபோல், தற்போது எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டரையும் 10 நிமிடங்களுக்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி குயிக் காமர்ஸ் தளங்களில் ஒன்றான ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart), தனது சேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டுமின்றி, இனி எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர்களையும் தனது செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இந்தியாவில் புதிய சேவை!

இதன் மூலம், மளிகைப் பொருட்களைப் போலவே கேஸ் சிலிண்டரையும் சில நிமிடங்களிலேயே ஆர்டர் செய்து வீடு தேடி பெற்றுக்கொள்ள முடியும். குயிக் காமர்ஸ் சேவைகளின் வேகமான டெலிவரி அனுபவத்தை இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் விரிவுபடுத்தியிருப்பது, நுகர்வோருக்கு மிகவும் பயனுள்ள புதிய வசதியாக பார்க்கப்படுகிறது.

இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக, ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம், அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் முக்கிய முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையின் மூலம், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இனி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) செயலி வழியாக நேரடியாக வீட்டிற்கே ஆர்டர் செய்யலாம். வாடிக்கையாளர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எல்பிஜி (LPG) சிலிண்டர்களை செயலியில் பதிவு செய்து, சுமார் 10 முதல் 30 நிமிடங்களுக்குள் வீடு தேடி டெலிவரி பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இந்த சேவைக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்களின் வரவேற்பு மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, அடுத்த கட்டமாக சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, 10 கிலோ மற்றும் சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் எல்பிஜி (LPG) சிலிண்டர்களைப் பெற வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து, டெலிவரி நடைமுறையைப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், புதிய சேவையின் மூலம் இனி வீட்டிலிருந்தபடியே ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் செயலியில் சிலிண்டரை ஆர்டர் செய்தாலே, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவை நேரடியாக வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்.

ஹெச்பி (HP) நிறுவனம் ஏற்கனவே 5 கிலோ எடை கொண்ட 'சோட்டா' எல்பிஜி (LPG) சிலிண்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, அண்மையில் 10 கிலோ எடை கொண்ட புதிய 'ஹெச்பி நவ்யா' (HP Navya) சிலிண்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி.. இந்தியாவில் புதிய சேவை!

இந்த 5 கிலோ மற்றும் 10 கிலோ எல்பிஜி (LPG) சிலிண்டர்களை வாங்குவதற்கு ஏற்கனவே கேஸ் இணைப்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சிலிண்டர் வாங்கும்போது காலி சிலிண்டரை ஒப்படைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அடுத்த முறை முதல் காலி சிலிண்டரை கொடுத்து புதிய சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலமே இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இளைஞர்கள், பேச்சிலர்கள், மாணவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவசரமாக கேஸ் சிலிண்டர் தேவைப்படும் நேரங்களில் 10 முதல் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி கிடைப்பதால் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

photo credits: entrackr, officechai, instamart

Best Mobiles in India

English summary
Swiggy Instamart Launches 10-Minute LPG Cylinder Delivery Service in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X