வீட்டுக்கு வீடு மளிகை.. 15 நிமிடங்களில் வருது எல்லாம்.. சிங்கிளாக களமிறங்கிய இன்ஸ்டாமார்ட்.. Swiggy-ல இருக்கு!
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், 5 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்களுக்குள் மளிகை பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்கும் இன்ஸ்டாமார்ட் (Instamart) சேவையானது, இனிமேல் தனி ஆப் மூலம் கிடைக்க இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இப்போது டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் எப்படி ஆர்டர் செய்வது? எந்தெந்த நகரங்களில் சேவை கிடைக்கிறது? ஸ்விக்கி ஆப் மூலம் ஆர்டர் செய்ய முடியுமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் ஃபுட் ஆர்டர் (Online Food Order) மட்டுமல்ல, மளிகை, பழங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பியூட்டி பொருட்களையும் ஸ்விக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் ஃபுட் தவிர மற்ற பொருட்களின் டெலிவரியானது இன்ஸ்டாமார்ட் மூலம் கிடைத்தது. ஆர்டர் செய்த பிறகு குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் எல்லாமே கிடைப்பதால், கஸ்டமர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

இந்த வரவேற்பு காரணமாக ஸ்விக்கி ஆப்பில் கிடைத்துவந்த, இந்த இஸ்டாமார்ட் சேவையை தனி ஆப் மூலம் வழங்க திட்டமிடப்பட்டது. இப்போது, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) ஆகியவற்றில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. ஆகவே, இனிமேல் ஸ்விக்கி ஆப் இல்லாமலேயே, பிரத்யேகமாக கிடைக்கும் இன்ஸ்டாமார்ட் ஆப் மூலம் மளிகை பொருட்களை பெறலாம்.
இதுபோக காய்கறிகள், பழங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பியூட்டி பொருட்களையும் அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப இந்த ஆப் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஸ்விக்கி ஆப்பில் இன்ஸ்டாமார்ட் சேவை நீக்கப்படவில்லை. அதிலும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஆப்கள் மூலமும் இப்போது மளிகை பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். 72 நகரங்களில் இன்ஸ்டாமார்ட் சேவை கிடைக்கிறது.
சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூரூ போன்ற முக்கிய நகரங்களில் இன்ஸ்டாமார்ட் ஹப் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. அதாவது, நகரத்தின் முக்கிய பகுதிகளில் இன்ஸ்டாமார்ட் ஹப் வைக்கப்பட்டிருக்கும். அதை சுற்றி அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் செல்ல முடிகிற பகுதிகளுக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும். இந்த சேவை 24 மணி நேரமும் சில நகரங்களில் கிடைக்கிறது.
ஆகவே, அவசர நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் இருந்தால், இந்த இன்ஸ்டாமார்ட் சேவை பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. அதேபோல 20 நிமிடங்களில் சேவை வழங்கப்படுவதால், மளிகை பொருட்களை வாங்குவதற்காக நேரம் குறைகிறது. இந்த இன்ஸ்டாமார்ட் ஆப்பை எளிமையாக பயன்படுத்த முடியும். வழக்கமாக ஆன்லைனில் ஆர்டர் செய்வதை போலவேத்தான் இந்த சேவையும் கிடைக்கிறது.
இந்த இன்ஸ்டாமார்ட் ஆப்பை டவுன்லோட் செய்த பிறகு உங்களது மொபைல் நம்பர் வெரிபிகேஷன் இருக்கும். அதன்பிறகு உங்களது முகவரியை கொடுத்தால், உங்களுக்கு சேவை கிடைக்குமா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், உங்களுக்கு மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், எலக்ட்ரானிக், பியூட்டி பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படும்.
இதில் எலக்ட்ரானிக் பொருட்களில் மிக்சி, பிளண்டர், இன்டக்சன், அயர்ன் பாக்ஸ், பேன், சிசிடிவி கேமரா போன்றவையும் கிடைக்கின்றன. இப்படி பெரும்பாலான பொருட்களை 20 நிமிடங்களில் கொடுத்து ஆன்லைன் டெலிவரியில் அடுத்த கட்டத்தை இன்ஸ்டாமார்ட் எட்டி இருக்கிறது. வரும் நாட்களில் இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களிலும் சேவைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








